வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2018

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு


சென்னை மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம்  வெளியிட்ட அறிக்கை:

எஸ்.எஸ்.எல்.சி, எச்.எஸ்.சி, பட்டப்படிப்பு ஆகிய கல்வித்தகுதிகளை உடைய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற சென்னை சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும். விண்ணப்பதாரர் 40 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தனியார்நிறுவனங்களில் பணிபுரியாதவராகவும், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ50 ஆயிரத்துக்கும் மிகாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேற்கண்ட தகுதிகள் இருப்பவர்கள் மட்டும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியுடையவர் ஆவர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் உதவித்தொகை விண்ணப்பங்களை ெசன்னை சாந்தோம், தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தளவில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு ெசய்து ஓராண்டு உயிர்ப்பதிவேட்டில் உள்ளவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உரிய விண்ணப்பத்தினை ெபற்று விண்ணப்பிக்க வெண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வித்தகுதி மற்றும் குடும்ப ஆண்டுவருமானம் உச்சவரம்பு ஏதுமில்லை. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை சம்மந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ெபற்று விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தைவேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித் தொகை எண் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

5 comments:

  1. Tirunelveli district apply pannalama

    ReplyDelete
  2. This scheme is common for all district.. all can apply..collect the application form in respective district employment office....

    ReplyDelete
  3. This scheme is common for all district.. all can apply..collect the application form in respective district employment office....

    ReplyDelete
  4. This scheme is common for all district.. all can apply..collect the application form in respective district employment office....

    ReplyDelete
  5. இது போன்று உதவி தொகை குடுக்கவே கூடாது, படிக்காத எத்தனையோ மக்கள் உழைத்து உண்கின்றனர், உனக்கு என்ன குறை, வேலை செய்து பிழைக்கலாமே, மானம் கெட்டு பிச்சை எடுப்பதற்கு சமம் இது, அரசாங்கம் உடனடியாக இந்த திட்டத்தை நிறுத்திவிட்டு வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும், இலவசம் போன்ற திட்டங்கள் இருக்கவே கூடாது, வயது முதிர்ந்த வேலை செய்ய இயலாத உடல் ஊனமுற்ற மக்கள் கூட உழைத்து உண்கின்றனர்,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி