பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2018

பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு


பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சுகாதார உறுதிமொழி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், தென் மேற்கு பருவமழை முடிந்த நிலையில், டெங்கு, பன்றி காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதில், குழந்தைகள், மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பள்ளிகளில் காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து, பள்ளிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், காய்ச்சல் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்படுகிறது.உறுதிமொழி வருமாறு:நான், என் வீட்டிலோ, வீட்டின் சுற்றுப்புறத்திலோ, பள்ளி வளாங்களிலோ, டயர்கள், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்களை குவிக்க மாட்டேன். தேவையற்ற பொருட்கள் கிடந்தால், அவற்றை உடனேஅகற்றுவேன்.என் வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடங்கள், சிமென்ட் தொட்டிகள் உள்ளிட்டவற்றை, கொசு புகாத வண்ணம் மூடி வைப்போம். தண்ணீர் சேகரிப்பு தொட்டிகளை, அடிக்கடி சுத்தம் செய்து வைப்போம். அரசு மேற்கொள்ளும் அனைத்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும், நானும், பெற்றோரும், அண்டை வீட்டாரும் ஒத்துழைப்போம்.இவ்வாறு உறுதிமொழியில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி