கல்விதுறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து பள்ளிகளில் திடீர் ஆய்வு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2018

கல்விதுறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து பள்ளிகளில் திடீர் ஆய்வு!


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு தொடக்க பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் கல்விதுறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து 126 பள்ளிகளில் திடீர் ஆய்வில்ஈடுப்பட்டனர்.

முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வில், 2 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் பேச்சு, எழுத்து உள்ளிட்ட கல்வித் திறனை பற்றி ஆராய்ந்தனர். பின்னர் விருத்தாச்சலம் தனியார் மண்டபத்தில் நடந்த திறன் மேம்பாட்டு மேலாய்வு கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதில் எந்தெந்த பள்ளிகள் மாணவர்கள் கல்வி திறனில் குறைவாக உள்ளார்கள் என்றும், அப்பள்ளி மாணவர்களை எவ்வாறு முன்னேற்றமடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி