ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2018

ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்.!


ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக ஆசிரியர்களைநியமிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.கோவையில் அண்மையில் நடைபெற்ற பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்.கல்வி உரிமைச் சட்டத்தின் படி அனைத்து அரசு, அரசுஉதவி பெறும் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு அமைத்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ வேண்டும்.

ஒரு ஆசிரியருக்கு ஒரு வகுப்பறையும், ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையில் 30மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்க வேண்டும்.கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன்பாகவே ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளியில் பயிலும் குழந்தையின் தாயார் பெண் தூய்மைப் பணியாளர் என்றால் அவர்களுக்கான வேலை நேரத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகளில் செயல்பட்டு வரும் சத்துணவு பொருள்களுக்கு விலைவாசிக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்துவதையும், அந்த மதிப்பெண்களை கல்லூரி கல்விசேர்க்கைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அரசு ஆணையை திரும்பப் பெறும் அரசின் நடவடிக்கையைகைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சு.சந்திரசேகர், எழுத்தாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் கல்வி சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

14 comments:

  1. தனியார் பள்ளியில் அப்படி தான் நடக்கிறது

    ReplyDelete
  2. பகுதி நேர ஆசிரியர்கள் கண்ணரை நீக்குமா இந்த அரசு?

    ReplyDelete
  3. எண்டா உங்களுக்கு மட்டும் தான் கண்ணிர் இருக்கா?? அப்போ நாங்க எல்லாம் எங்க போய் முட்டிக்க.. . ஒரு எக்ஸாம் வெச்சு வேலை போடாம இழுத்துட்டு இருக்காங்க, இவனுங்க வேற பாதில வந்து சீனியாரிட்டி பகுதி நேரம்னு கடுப்ப கெளப்பிட்டு இருக்கானுங்க,

    ReplyDelete
    Replies
    1. உஙகளுக்கு ஏப்பா கடுப்பு எங்கமேலே. நாங்க உங்களுக்கு என்ன பண்ணோம்.

      Delete
    2. நீங்க நோகமா பகுதி நேர வேலை வாங்கிட்டு அங்க வேலை செஞ்சு கணக்கு காட்டி அப்பறம் எக்ஸாம் வெச்சு எடுக்குரப்போ எங்களுக்கு தான் அந்த வேலை குடுக்கனுனு கேஸ் போடுவிங்க, அப்போ நாங்க எல்லாம் என்ன பண்ண, மொக்கையா நீயும் அந்த வேலைக்கு போக வேண்டியது தான்னு சொல்லாதிங்க, 1500 பேருக்கு பகுதி நேர வேலை கிடைக்குது, குத்துமதிப்பா வெச்சுக்குவோம், அப்ப மீதி இருக்குற லட்சகணக்கான ஆளுங்க எல்லாம் சும்மா நின்னு வேடிக்கை பாக்குறதா? இப்போ எல்லா வேலைக்கும் எக்ஸாம் வெச்சு தான் எடுக்குறாங்க, முன்னுரிமை எல்லாம் இல்லை, நீங்க உள்ள பூந்து குட்டைய கொழப்பி எல்லாத்தையும் கெடுக்காதிங்க, உங்கள அரசாங்கம் யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கு, நீங்களும் நிரந்தரம் பண்ணுவாங்கன்னு நெனச்சுட்டு வேலை பாக்குறிங்க, ஏமாந்து போய், பாருங்க, என்ன உங்களுக்கு 7000 ரூபாய் குடுக்குற வரைக்கும் அரசாங்கத்துக்கு லாபம் தான், அதான் சேரும்போதே கையெழுத்து வாங்குறாங்களே, நிரந்தரம் பண்ண முடியாதுன்னு, அப்பறம் ஏன் வீனா அந்த வேலைக்கு போயிட்டு இருக்குற வாய்ப்புகளையும் தடுக்குரிங்க, நீங்க யாருமே அந்த வேலைக்கு போகலைனா அரசாங்கம் கண்டிப்பா தேர்வு வைப்பாங்க, வெச்சு தான் ஆகணும்,

      Delete
  4. வேலை போட விடமல் கேஸ் போட்டு பொழைப்பில் மண்ணை போட்டீர்கள் இதற்கு மேல் என்னா வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. நீஙக மாத்ரம் தேர்வு எழுதவில்லை நாங்களும் தான் எழுதி இருக்கிறோம்.உங்களைவிட அதிகம் தகுதி எங்களுக்கு இருக்கு.தப்பு பண்ண தண்டனை உண்டு தானே. தில்லுமுல்லு பேர்வழிகளால்தான் இந்த நிலை. அதை புரிந்து கொள்ளுங்கள் தம்பிகளா
      .

      Delete
    2. போகாமலே நோம்பு இங்கே யாரும் வைக்கவே.

      Delete
    3. வைக்கவே இல்லை.

      Delete
  5. தமிழக அரசு மாணவர்களுக்கு இலவசங்களை நிறுத்தினால் எல்லாம் சரியாகிவிடும்

    ReplyDelete
  6. அரசுப்பள்ளியில் கல்வியின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. கலாச்சாரமே பாதிக்கின்றது

    ReplyDelete
  7. History teacher separate and geography teacher separate a appointment podanum

    ReplyDelete
  8. அனைவரின் கருத்துக்கணிப்பு நன்கு ஆனால் எத்தனை அரசியல்வாதிகள் தனியார் கல்லூரிகள் (ஆசிரியர் பயிற்சி நிறுவனம்) நடத்துகிறார்களோ அதனை முதலில் மூட வேண்டும் பின்னர் அனைத்து தனியார் கல்லூரிகளையும் 10 வருடத்திற்கு மேல் நடத்தி இருந்தால் கல்லூரிகள் நடத்தியது போதும் என்று அவர்கள் அங்கிகாரம் ரத்து செய்தல் வேண்டும் . புதிய அங்கிகாரம் கொடுக்கக்கூடாது.ஏன் தெரியுமா என்னுடைய கருத்தை படிப்பவர் கூட அரசாங்கத்திற்கு 30 லட்சம் லஞ்சமாக கொடுத்தால் உங்கள் பெயரில் புதிய கல்லூரி ஆரம்பம் செய்யலாம் அவர்களுக்கு பணம் தான் முக்கியம்

    ReplyDelete
  9. வணக்கம் பெரும்பாலான அரசு பள்ளிகளில் பெற்றோர் அல்லாதவர் .அதாவது பாதுகாவலர், புரவலர் போன்றோர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பதவியில் உள்ளனர்.

    பெற்றோர் ஆசிரியர் கழக துணை விதிகள் திருத்தம் 2006 ன்படி பள்ளியில் படிக்கும் பெற்றோர்களில் ஒருவரையே பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதை யாரும் பின்பற்றவில்லை இந்த புதிய விதிமுறைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி