Science Fact 41 - பம்பைப் (pump) பயன்படுத்தி மிதிவண்டிச் சக்கரத்திற்குக் காற்றடிக்கும்போது, பம்ப் குழாய் சூடாவது ஏன் ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2018

Science Fact 41 - பம்பைப் (pump) பயன்படுத்தி மிதிவண்டிச் சக்கரத்திற்குக் காற்றடிக்கும்போது, பம்ப் குழாய் சூடாவது ஏன் ?


அடிப்படையில் பம்ப் என்பது காற்றை அழுத்துவதற்குப் பயன்படும் ஒரு சாதனம்.

மிதிவண்டிச் சக்கரத்திற்குக் காற்றை ஏற்றும்போது பம்பின் நடுப்பகுதியில் உள்ள தண்டானது(rod) மேலும் கீழும் மாறி மாறி விரைந்து செல்வதைக் காண்கிறோம்; கீழ்நோக்கிச் செல்லும்போது காற்று அதிகமான அழுத்ததிற்கு உட்பட்டு அதன் வெப்பநிலை (temperarure) மிகுதியாகிறது.

மேலும் பம்ப் விரைந்து செயல்படுவதால் காற்றில் அழுத்தம் மிகுதியாக ஏற்பட்டு கூடுதல் வெப்பமும் உண்டாகிறது. இவ்வாறு விரைவாக உற்பத்தியாகும் வெப்பம் அதற்கு ஏற்றவகையில் விரைந்து வெளியேற முடிவதில்லை. இதன் விளைவாகபம்பின் வெளிப்புறப் பகுதிக்கு வெப்பம் பரவி குழாய் சூடாகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி