TRB ஏற்பட்டுள்ள குளறுபடியால் காலி பணியிடங்களை TNPSC வழியே நியமனம் செய்ய கல்வித்துறை முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2018

TRB ஏற்பட்டுள்ள குளறுபடியால் காலி பணியிடங்களை TNPSC வழியே நியமனம் செய்ய கல்வித்துறை முடிவு


அண்ணா நுாலகம் உட்பட அரசு நுாலகங்களில், புதிய பணியிடங்களை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு வழியே நியமிக்க, பள்ளி கல்வித் துறை கடிதம் அளித்துள்ளது.

டி.ஆர்.பி.,யில் ஏற்பட்டுள்ள குளறுபடியால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.பணியிடங்கள்தமிழக பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக மேற்கொள்ளப்படுகிறது.

நுாலகர்கள் மற்றும் நுாலகத் துறை பணியாளர்கள் தேர்வை, டி.ஆர்.பி., மேற்கொண்டு வந்தது. பள்ளி கல்வியில் ஊழியர்கள், உதவியாளர்கள் தேர்வு, அரசு தேர்வுத்துறையின் வழியாக நடத்தப்படுகிறது.நுாலகம்இந்நிலையில், அண்ணா நுாலகம் மற்றும் பொது நுாலக துறை நுாலகர்கள் பணியில், 50க்கும் மேற்பட்ட காலி இடங்களை நிரப்ப, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.இந்த முறை, பணி நியமன நடவடிக்கைகளை, டி.ஆர்.பி.,க்கு பதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியாக மேற்கொள்ள, முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான கடிதம், டி.என்.பி.எஸ்.சி.,க்கு அனுப்பப்பட்டுள்ளது.டி.ஆர்.பி.,யில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு குளறுபடி, சிறப்பாசிரியர் பணி நியமன பிரச்னை போன்றவற்றால், பெரும் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது. எனவே, தற்போதைய நிலையில், டி.ஆர்.பி., சார்பில் போட்டி தேர்வு நடத்துவதில், பல்வேறு சிக்கல்கள் உள்ளதால், டி.என்.பி.எஸ்.சி., உதவியை, பள்ளிக்கல்வித் துறை நாடியுள்ளது.

5 comments:

  1. ஏன் TNPSC அதுதான் கொஞ்சம் நல்லா போயிட்டு இருந்தது அதுலயும் வைக்கணுமா?TRB திறமை இப்ப தான் வெளிய ஆரம்பமாகியுள்ளது.

    ReplyDelete
  2. Ella trb examlayum kularupati. Oru tholilaly sariya velai seiya villai yentral angu muthalaly sari Ella yentru thaan Artham. Ethu thaan entha trb board LA nadakkuthu

    ReplyDelete
  3. அப்போ tet exam சனியன் எப்போது

    ReplyDelete
  4. Ippadiye...ellaa thuraigalayum oolal panni emathunaa ellarum arasangatha ethirthu poradum
    soolalukku varapoguthu naadu.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி