TRB - தீவிர கண்காணிப்பில் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2018

TRB - தீவிர கண்காணிப்பில் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம்!


ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மீதான, தேர்வு முறைகேடு பிரச்னைகளை தொடர்ந்து, டி.ஆர்.பி., அலுவலகத்துக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன நடவடிக்கைகளை, டி.ஆர்.பி., மேற்கொண்டு வருகிறது. ஆனால், 2014க்கு பின், டி.ஆர்.பி.,யின் தேர்வு நடவடிக்கைகள் சர்ச்சையாகி வருகின்றன.

இதில், உச்சகட்டமாக, 2017ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி நியமன தேர்வில், போலியாக மதிப்பெண் வழங்கியது; ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், சிலர், போலி மதிப்பெண் பெற்றது போன்ற பிரச்னைகள், டி.ஆர்.பி.,க்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, சென்னை போலீசார் கிரிமினல் வழக்கு, பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.சமீபத்தில் நடந்த சிறப்பாசிரியர் பணி நியமன தேர்விலும் பிரச்னை ஏற்பட்டது. இந்த தேர்வுக்கு, சரியான கல்வி தகுதியை நிர்ணயிக்க தவறியதால், சான்றிதழ் சரிபார்ப்பில், பெரும் குளறுபடி ஏற்பட்டது.அதனால், தேர்வர்கள் நாள்தோறும், டி.ஆர்.பி., அலுவலகத்துக்கு வந்து போராட்டம் நடத்துவதும், மனு கொடுப்பதும் வாடிக்கையாகி விட்டது.இந்நிலையில், ஊழல் பிரச்னைகள் மற்றும் நியமன குற்றச்சாட்டுகளை சமாளிக்கும் வகையில், டி.ஆர்.பி., அலுவலகம் முன், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் நான்காம் மாடியில் இயங்கும், டி.ஆர்.பி., அலுவலக வாயிலில், 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அலுவலகத்துக்கு வரும் தேர்வர்கள் மற்றும் தேர்வு சார்ந்த மனுக்களை அளிக்க வருவோர், போலீசார் வசம் உள்ள பதிவேட்டில் எழுதி, முன் அனுமதி பெற்று இருந்தால் மட்டும், உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.பெரும்பாலான தேர்வர்கள், டி.ஆர்.பி.,யின் தகவல் மையத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கே மனுக்களை பெற்று, திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

23 comments:

  1. தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்.

    ReplyDelete
    Replies
    1. இப்படி சொல்லிக்கிட்டே நண்பா பாதி ஆயுல் முடிந்தது

      Delete
  2. இவர்கள் இருக்கும் வரை உண்மையான தகுதி உடையவர்களுக்கு பயன்கள் மிக மிக குறைவு.

    ReplyDelete
    Replies
    1. Ellam uzhal seiyathan . Tamilnadil enntha urimaium. Uirodu illai.amma illathan ivvalavu foregei nadukkuthu. Thiramaisalikku velai kitaithu

      Delete
  3. தீவிர கண்காணிப்பு... அவசர சிகிச்சையயா.... ஆம்புலன்ஷ்.. வேண்டுமா.... நல்ல பண நாயகம்... இதற்கு எதற்கு ஒரு வாரியம்.. Open tender விட்டிரலாம்

    ReplyDelete
    Replies
    1. Trb honest illa. At same time. This action varverkkathakkathuthan but not believe

      Delete
  4. டிஆர்பி என்று ஒன்று உள்ளதா?

    ReplyDelete
  5. ஓவிய ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்விக் தகுதி SSLC மற்றும்TTC. என்ற நிலையில் அதற்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று கூறிய நிலையில் அதை முறையாக பெற்று சமர்ப்பித்த தேர்வர்கள் தங்களை காட்டிலும் குறைவான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்று பாதிக்கப்பட்ட தேர்வர்கள் TRB யிடம் நேரில் சென்று மனு அளித்துள்ளார்கள் . அதுகுறித்து TRB யின் உறுப்பினர் செயலரும் சிரப்பாசிரியர் தேர்ச்சி பட்டியல் தயாரிக்கும் பொறுப்பு அலுவளருமான தங்க மாரி அவர்கள் கூரிய பதில் கவணிக்க வேண்டிய மிக முக்கியமானது. எப்படி என்றால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு இணையதளத்தில் வெளியிட்டுள்ள குறிப்பானையில் ஒரு இடத்தில் கூட நீங்கள் free hand out line model drawing higher greade பாடத்தை தனியார் நிறுவன தலைவரிடமிருந்து தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடாத பட்சத்தில் உருப்பினர் செயலரும் சிறப்பாசிரியர் பட்டியல் தயாரிக்கும் அலுவலரும் ஏன் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் தனியாரிடம் தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியது தானே என்று கூறுவது தகுதியற்ற நபர்களை தேர்ச்சி பட்டியலில் உள்ளே நுழைந்து உள்ளது தகுதிவாய்ந்த தேர்வர்களை நீதிமன்றங்களுக்கு நீதி கிடைக்க நாடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இந்த தற்காலிக பட்டியல் வெளியீடு கண்டிப்பாக பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு திருத்திய பட்டியலாக வெளியிடாவிட்டால் TRB யின் முறைகேடு கட்டாயம் அம்பலமாகும். ஏற்கனவே பாலிடெக்னிக் விரிவுரை யாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக பலபேருடைய எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது.ஆகவே மதிப்பெண் பெற்று அடுத்த நிலையில் உள்ள தகுதி வாய்ந்த நபர்களுக்கு மறுபரிசீலனை செய்து RESERVED என்று அவரவருக்கு என்று ஒதுக்கிகீடு செய்யப்பட்ட நடப்புக் காலிப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு குறிப்பானை படி மிகுந்த அக்கறை கொண்டு 1:2 என்ற சான்றிதழுக்கு அழைக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முறையாக இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீதுள்ள நம்பிக்கையை காப்பது தேர்வு வாரியத்தின் தலையாய கடமையாகும். மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இந்த விஷயத்தில் ஏற்கனவே அறிவித்த படி குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டினால் கண்டிப்பாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.என்ற வாக்குறுதி யின்படி பணி நியமன ஆணைகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேர்வு வாரியத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவரின் கருத்து.

    ReplyDelete
  6. சிறப்பாசிரியர் நியமனத்தில் இன்றைய சூழ்நிலையை உணர்ந்து தெள்ளத் தெளிவாகக் கருத்து தெரிவித்துள்ளார். கண்டிப்பாக உளவுத்துறை கண்காணிக்கும்.

    ReplyDelete
  7. CBI யே ஊழல். டாய் செங்கொட்டையா.... தாமதம் தாமதமாக கொலை வெறி உருவாக்கதடா...........

    ReplyDelete
  8. M.ed vidaithaal thiruthuthalil perumpaalonorukku 34 mark pottu revalution il panam parikkum sathi nadappathaaga maanavarkaluku perum santhegam neenda kaalamaka thodarkirathu... yarum kandu kolvaar illai...

    ReplyDelete
  9. TRB Special Teacher Selections Review 1:5 or 1:4 or1:3 என்ற முறையில் தேர்வு செய்தால் மிகுந்த பயணளிக்கும். ஊழல் குற்றச்சாட்டு குறையும், தகுதியான ஆசிரியர்கள் மேலும் பலர் உள்ளனர்.

    ReplyDelete
  10. ஆசிரியராக ஆவதற்கான தகுதியை நிர்ணயிக்கும் சரியான அளவுகோல்கள் இங்கே இல்லை.

    ReplyDelete
  11. ஊழல் வாரியம் ....

    ReplyDelete
  12. 1. Special Teacher qualification certificate onlinela scan pani send pana TNPSC pola solliyirunthal ivlo confusion irunthirukathu .exam application reject agiyirukium.


    Sewing Teacher qualification sewing &embiroidery passed in higher and also completed for govt. TTC sollirunthinga.athey pola 40% marks edutha elloraiyum CV ku koopitu avangala yaru certificates correcta producepanranga parthirukalam.

    ReplyDelete
  13. 1. Special Teacher qualification certificate onlinela scan pani send pana TNPSC pola solliyirunthal ivlo confusion irunthirukathu .exam application reject agiyirukium.


    Sewing Teacher qualification sewing &embiroidery passed in higher and also completed for govt. TTC sollirunthinga.athey pola 40% marks edutha elloraiyum CV ku koopitu avangala yaru certificates correcta producepanranga parthirukalam.

    ReplyDelete
  14. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அவலநிலையை கண்டிப்பாக கலைஆசிரியர் நல சங்க தலைவர் S.A.ராஜ்குமார் அவர்கள் மிக தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுவது மிகவும் பாராட்டுக்குரியது.பொது நலத்திற்கு பாடுபடுப வர்களுக்கு பல்வேறுபட்ட இடையூகள் ஏற்படுவது சகஜம்தான் ஆகவே கலையாசிரியர் நல சங்க தலைவர் நீதிக்காக தொடர்ந்து செய்திதாள்களில் குரல் கொடுத்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும்.மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் இல்லாத ஒரு (free hand out line model drawing higher greade)என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடாத பட்சத்தில் இப்போது அது தேவை என்று கூறுவது தகுதியற்ற நபர்களை தேர்ச்சி பட்டியலில் உள்ளே நுழைந்து உள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற குற்றச்சாட்டை மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டிய கலையாசிரியர் நலச் சங்கம் தலைவருக்கு TRB யின் பதில் என்ன ? அதேபோல் ஒருவர் தன் அப்பாவிடம் ஓவிய பயிற்சி பெற்றிருந்தால் அவர் தமிழ் வழி சான்றிதழ் எப்படி பெற்று கொடுப்பது என்ற தெளிவான கருத்து தெரிவித்துள்ளார்.

    ReplyDelete
  15. ஓவியம் மற்றும் தையல் ஆசிரியர் தவிர இசை , உடற்கல்வி ஆசிரியர் பணி இடங்களை நிறப்பலாமே.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி