1,132 அங்கன்வாடிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.1.13 கோடி ஒதுக்கீடு - kalviseithi

Nov 29, 2018

1,132 அங்கன்வாடிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.1.13 கோடி ஒதுக்கீடு


அங்கன்வாடி மையங்களில், குடிநீர் வசதியை மேம்படுத்த, 1.13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு, 1,132 மையங்களில், 1.13 கோடி ரூபாய் செலவில், பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நிதி ஒதுக்கக் கோரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட இயக்குனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று, மத்திய அரசு உதவியுடன், இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.ஒரு மையத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் வீதம், 1,132 மையங்களுக்கு, 1.13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

 இத்திட்டத்தில், 500 லிட்டர் கொள்ளளவு உள்ள, குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். குடிநீர் குழாய், கழிப்பறை, சமையல் அறை ஆகியவற்றுக்கு, தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுஉள்ளது.இதற்கான அரசாணையை, சமூக நலத் துறை முதன்மை செயலர், மணிவாசன் பிறப்பித்து உள்ளார்.

1 comment:

  1. Anganvadi fullah close pannittu PRKG&LKG schools KUTA join panna poringa apparam yethukku 1.13 cr

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி