தேர்தல் பணி அலுவலர்கள் பட்டியல் : 48 மணி நேரத்தில் வழங்க உத்தரவு - kalviseithi

Nov 14, 2018

தேர்தல் பணி அலுவலர்கள் பட்டியல் : 48 மணி நேரத்தில் வழங்க உத்தரவு


லோக்சபா தேர்தலில் பணியாற்ற உள்ள அலுவலர்களின் முழு விபரங்களை 48 மணி நேரத்திற்குள் தேர்தல் பிரிவில் ஒப்படைக்க வேண்டும், என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளும் லோக்சபா தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளை துவங்கி உள்ளன. இதன் தொடர்ச்சியாக தேர்தல் கமிஷன், தேர்தலில் பணியாற்ற உள்ள அலுவலர்களின் முழு விபரங்களை சேகரித்து பட்டியலிடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

தேனி தேர்தல் பிரிவு அலுவலர் ஒருவர் கூறியதாவது:தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி லோக்சபா தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலர், மண்டல அலுவலர்கள், பயிற்சி அலுவலர்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் , பறக்கும் படையினர் உள்ளிட்ட தேர்தல்பணியாற்ற உள்ள அனைத்துத்துறை அலுவலர்களின் முழு விபரங்கள் அடங்கிய பட்டியலை தயாரித்து வருகிறோம்.

இதனை இன்று காலையில் இருந்து (நேற்று) 48 மணி நேரத்திற்குள் கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதில் தனியாக மிக அதிக பதட்டம் நிறைந்த ஓட்டுச்சாவடிகளில் ஏற்கனவே நடந்த தேர்தல்களில் அங்கு பணிபுரிந்த அலுவலர்களின் விபரங்களும் சேகரிக்கப்படுகிறது,' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி