நேரு பிறந்தநாள்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2018

நேரு பிறந்தநாள்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடுமுன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14 -ஆம் தேதி, பள்ளிக் குழந்தைகளின் புகைப்படத்துடன்கூடிய வாழ்த்துஅட்டைகளை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14 -ஆம் தேதி, ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதிய திட்டம் ஒன்றை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்த உள்ளது.

இதன்படி, தமிழகத்தில் 5,000 அரசுப் பள்ளிகளில் தொடக்க கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட உள்ளன. அதில் அந்தந்த குழந்தைகளின் புகைப்படங்களை இணைத்து அவர்களுக்கே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாழ்த்து அட்டைகளை பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்குவார்கள். முதல்கட்டமாக 32 மாவட்டங்களில் 65 பள்ளிகளுக்கு வாழ்த்து அட்டைகளை பள்ளிக் கல்வித் துறை அனுப்பி வைத்துள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி