ஓய்வூதிய திட்டம் பற்றி ஆய்வு வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் - kalviseithi

Nov 28, 2018

ஓய்வூதிய திட்டம் பற்றி ஆய்வு வல்லுனர் குழு அறிக்கை தாக்கல்


பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த, வல்லுனர் குழு நேற்று முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக, ஏற்கனவே நடைமுறையில் இருந்த, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய, 2016 பிப்., 26ல், வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக, ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் நியமிக்கப்பட்டார்.

சில மாதங்களில், அவர் பதவியை ராஜினாமா செய்தார். 2017ல், புதிய தலைவராக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதர் நியமிக்கப்பட்டார். வல்லுனர் குழு, பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து, கருத்து கேட்டது. அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், 'பழைய ஓய்வூதிய திட்டத்தை, அமல்படுத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, கைவிட வேண்டும்' என, வலியுறுத்தி வருவதுடன், போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கையை, குழுத் தலைவர் ஸ்ரீதர் நேற்று, முதல்வர் பழனிசாமியிடம் தாக்கல் செய்தார்.

1 comment:

  1. தமிழகத்திலேயே முதன் முறையாக முதுநிலை வேதியியல் ஆசிரியர் தேர்வுக்கான பயிற்சி முற்றிலும் தமிழ் வழியில்.வகுப்புகள் துவங்கும் நாள்: 08-12-2018 (சனிக்கிழமை)நேரம்: காலை 10.00 மணிபயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களின் ஆதார் அடையாள அட்டையை புகைப்படம் எடுத்து அனுப்பி தங்களின் முன்பதிவை உறுதி செய்து கொள்ளவும். முன்பதிவு அவசியம்.அறிவார்ந்த ஆசான் பயிற்சி மையம்சபரி டிஜிட்டல் மாடியில் ( 3வது மாடி)தமிழ்க்களம் புத்தக நிலையம் அருகில்செநதுறை ரோடுஅரியலூர்.தொடர்புக்கு: 8778977614, 9942571857நன்றி.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி