நீட் தேர்வு நேரம் மாற்றம்: புதிய கட்டுப்பாடுகளும் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2018

நீட் தேர்வு நேரம் மாற்றம்: புதிய கட்டுப்பாடுகளும் அறிவிப்பு


நீட் தேர்வுக்கான 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவு நேற்று துவங்கியது. இந்த ஆண்டு, தேர்வு நேரம், காலையில் இருந்து, பிற்பகலுக்கு மாற்றப்பட்டு உள்ளதுடன், புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இளநிலை மருத்துவ படிப்புகளில் (எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்) சேருவதற்கான நீட் 2019 தேர்வு, அடுத்த ஆண்டு, மே மாதம் 5 -ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இத்தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. இதற்கு நவம்பர் 30 வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் 2019 ஜூன் 5 - ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.இந்த தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று காலை 11:30 மணிக்கு துவங்கியது. வரும் 30 கடைசி நாளாகும்.இந்தத் தேர்வுக்கான கட்டணம் ரூ. 1,400. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ரூ. 750 செலுத்தினால் போதுமானது. கட்டணத்தை டிசம்பர் 1 இரவு 11:30 மணி வரை செலுத்தலாம்.

இந்த ஆண்டு நீட் தேர்வு, மே, 6, காலை, 10:00 மணி முதல், 1:00 மணி வரை நடந்தது. ஆனால், 2019க்கான தேர்வு நேரம், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது. தேர்வுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.

அதன் விபரம்: ஆன்லைன் விண்ணப்ப பதிவின் போது, பெற்றோரின் கல்வித்தகுதி, தொழில் மற்றும் வருமானம் குறிப்பிடப்பட வேண்டும். 'ஆதார்' எண் கட்டாயம் இல்லை. பட்டியலிடப்பட்ட, ஏதாவது ஒரு அடையாள எண்ணை பதிவு செய்யலாம். ஆதார் எண் பதிவதாக இருந்தால், கடைசி நான்கு இலக்க எண்களை மட்டுமே பதிய வேண்டும். வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் போது, விரல் ரேகையையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

தேர்வு மையத்துக்குள், தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வரக் கூடாது. இந்த கட்டுப்பாட்டை மீறுவோர் மற்றும் காப்பி அடித்து பிடிபடுவோருக்கு, மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்கள், பிளஸ் டூ இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருந்தால், நீட் தேர்வில் பங்கேற்கலாம். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மத்திய அரசு நடத்தும் தேசிய திறந்தநிலை பள்ளியில், பிளஸ் டூ முடித்தவர்கள், நீட் தேர்வு எழுத தகுதி இல்லை.இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின் படி, அனைத்து மாநில பாடத்திட்டங்களை இணைத்து, பொதுவான வினாத்தாள் தயாரிக்கப்படும்.

 பாடத்திட்ட விபரங்கள் மற்றும் ஆன்லைன் பதிவு விபரங்களை https://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.கடந்த ஆண்டில் தமிழகத்திலிருந்து 1.07 லட்சம் மாணவ, மாணவிகள் நீட் நுழைவுத் தேர்வில் பங்கேற்றனர். இந்த முறையும், இதே அளவிலான மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி