கலெக்டர் அதிரடி உத்தரவு - ஆசிரியர்கள் அதிருப்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2018

கலெக்டர் அதிரடி உத்தரவு - ஆசிரியர்கள் அதிருப்திமதுரையில் கலெக்டர் நடராஜனின் அடுத்தடுத்த உத்தரவுகளால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்துள்ளன.நடராஜன் பொறுப்பேற்றது முதல் கல்விமற்றும் சுகாதார துறைகளில் அதிக கவனம் செலுத்துகிறார்.

பொதுத் தேர்வு தேர்ச்சியில் மாவட்ட ரேங்க் முதல் 5 இடங்களுக்குள் வர வேண்டும் என கல்வித்துறைக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார்.குறிப்பாக, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவருக்கு தினம் ஒரு தேர்வு திட்டம் அமல்படுத்தினார். நடக்கவுள்ள அரையாண்டு தேர்வுவிடைத்தாள்களை மாற்று கல்வி மாவட்ட ஆசிரியரால்மதிப்பீடு செய்யும் முடிவில் உள்ளார். இதற்கு ஆசிரியரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சங்க ரீதியாக ஆசிரியர்கள் ஒன்றிணைந்து வருகின்றனர்.

அவர்கள் கூறியதாவது:கலெக்டர் அறிவுரையை எதிர்க்கவில்லை. சில கிராம பள்ளிகளில் காலை 8:30 மணிக்கு தினமும் தேர்வு நடத்துவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. 'கறார்' நடவடிக்கை எடுக்க முடியாது. தேர்வை மாலை அல்லது வாரம் ஒரு நாள் நடத்தலாம். ஒரு கல்வி மாவட்ட விடைத்தாள்களை வேறு ஒரு கல்வி மாவட்ட ஆசிரியர் திருத்துவதில் உடன்பாடு இல்லை. இதுகுறித்து கலெக்டரை சந்தித்து விளக்க உள்ளோம் என்றனர்

16 comments:

 1. ஒரு நல்ல ஆசிரியராய் இதை நான் வரவேற்கிறேன் . ரூபாய் 10000 ஆயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டு தனியார் பள்ளி ஆசிரியர்கள் நல்ல ரிசல்ட் கொடுக்கும்போது நமக்கு என்ன? நாம் வரவேற்போம்.
  - சுதாகர்
  குத்தாலம்

  ReplyDelete
  Replies
  1. நானும் அப்படி நினைத்துதான் அரசுப்பள்ளிக்கு வந்தேன்.ஆனால் மாணவர்களின் நிலை மிகவும் மோசம். வந்து பாருங்கள் தெரியும்.

   Delete
  2. மிகவும் சரி..

   Delete
 2. This system is going past 5 years in Ramnad district, now government schools are little better in Ramnad,,, the government teachers getting more salary but working less

  ReplyDelete
  Replies
  1. just don tell that teachers are getting more salary and working less. If students are not ready to study then we can take effort, but nowadays students are not even ready to listen they come for cycle and laptop. what to do suggest...

   Delete
 3. மாற்றம் ஒரே நாளுல வராது, கொஞ்சம் கொஞ்சமா தான் வரும். பையன் தனியாரா இருந்தாலும், அரசு பள்ளியா இருந்தாலும் வரமாட்டான், நூத்துல பத்து இருபது பேரு ரொம்ப ஆர்வமா இருப்பான், அவன புடிங்க, அவனுக்கு கோச்சிங் குடுங்க, நல்ல ரிசல்ட் காமிங்க, பேனர் அடிச்சு ஒட்டுங்க, மாணவர்கள் பெற்றோர் மனநிலை கொஞ்சம் கொஞ்சமா மாறும், ஒன்னு ரெண்டு வருஷம் ஆகலாம், மாற்றம் நல்ல முன்னேற்றம் குடுத்தா கண்டிப்பா அரசு பள்ளிகள் சிறப்படையும், பாசிடிவா நினச்சு வேலை செய்யுங்க,

  ReplyDelete
 4. ஐயா, நீங்கள் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும் ஒன்றும் படிக்கத் தெரியாத எல்லா மாணவர்களையும் தேர்வில் தேர்ச்சி பெற வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? எல்லா பாடத்திலும் மிகக் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இன்ஜினீயராகவோ டாக்டராகவா வருகிறார்கள் அவர்கள் அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் கல்லூரிகளில் தங்கள் சொத்துக்களை விற்று, கடன் வாங்கி அந்த தேர்வுகளிலும் மிகவும் குறைவான மதிப்பெண்களை எடுத்து வேலை கிடைக்காமல் அலைந்து அல்லல்பட தான் போகிறார்கள் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி என்ற ஒரு இலக்கே தவறான இலக்காகும் யாரோ ஒரு தனியார் கல்லூரி முதலாளி சம்பாதிப்பதற்காக எல்லா மாணவர்களின் தேர்ச்சி பெற செய்து அவர்களிடமிருந்து இருக்கும் கொஞ்சம் பணமும் பிடுங்கப்பட்டு மேலும் வறுமையில் உழல்கிறார்கள்.

  ReplyDelete
 5. 10 11 12 என்று பாரமல் ஆரம்ப கல்வியை மேன்மை படுத்தினால் மட்டுமே சாத்தியம் 9 வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பதை தவிர்த்தாலே பாதி சரியாகி விடும்

  ReplyDelete
  Replies
  1. சமச்சீர் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்டம் வரும் முன் எல்லாமே சரியா இருந்தது, எப்போ எல்லாருக்கும் கல்வின்னு சொல்லி எல்லாரையும் பாஸ் போட சொன்னாங்களோ அப்போவே கல்வி தரம் கொறஞ்சுருச்சு, இடைத்தேர்வு பருவத் தேர்வுக்கு கஷ்டப்பட்டு படிச்ச காலம் போய் இப்போ கேள்விய குடுத்து படிக்க சொன்னாலும் எவனும் படிக்க மாட்டிகிறான், இதுல எப்படி நீட் ஜே.இ.இ. எல்லாம் எழுத போறாங்க பசங்க, நூறு சதம் தேர்ச்சினு போலியா விளம்பரம் பண்ணி அரசு என்ன சாதிக்க போகுது, மத்திய தேர்வுகள் எதுலயும் நம்மளால கிழிக்க முடியல, போஸ்ட் ஆபீஸ் வேலைக்கு கூட நம்மளால ஒழுங்கா எழுதி போக முடியல,

   Delete
 6. All the above opinions are correct. But what ?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி