ஒன்பதாம் வகுப்பில், 'ஸ்கில் டெவலப்மென்ட் கோர்ஸ்' எனப்படும், தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்போவது எப்போது ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2018

ஒன்பதாம் வகுப்பில், 'ஸ்கில் டெவலப்மென்ட் கோர்ஸ்' எனப்படும், தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்போவது எப்போது ?


ஒன்பதாம் வகுப்பில், 'ஸ்கில் டெவலப்மென்ட் கோர்ஸ்' எனப்படும், தொழிற்கல்வி பயிற்சி அளிக்க, பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டும், அடுத்த கட்ட பணிகள் எதுவும் துவங்கப்படவில்லை.

மத்திய அரசு, ஒன்பதாம் வகுப்பில், தொழிற்கல்வி பயிற்சி அளிக்க, கடந்தாண்டு உத்தரவிட்டது. அழகுகலை, தையல், மெக்கானிக்கல் போன்ற, 'ஸ்கில் டெவலப்மென்ட்' வகுப்புகள் நடத்தி, மாணவர்களுக்கு தொழிற்கல்வி குறித்த புரிதலையும், அடிப்படை பயிற்சியும் வழங்க திட்டமிடப் பட்டது.கோவை மாவட்டத்தில், ராஜவீதி துணிவணிகர் மேல்நிலைப்பள்ளி, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பொள்ளாச்சி நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இப்பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டன.இப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு, கடந்தாண்டு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு பின், எவ்வித அறிவிப்பும் இல்லை. நடப்பு கல்வியாண்டு துவங்கி, ஐந்து மாதங்கள் நிறைவடைந்த நிலையில், இப்பயிற்சி வகுப்பு குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பில்லை.

கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,'மத்திய அரசின் கல்வித்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதால், ஸ்கில் டெவலப்மென்ட் கோர்ஸ், சில மாற்றங்களுடன் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. எத்தனை வகை பயிற்சிகள் வழங்குவது, பயிற்றுனர்கள் தேர்வு செய்யும் விதம், எந்த வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி