அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித் துறை புதிய உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2018

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித் துறை புதிய உத்தரவு


அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர் குறைவாக உள்ள இடங்களில் ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் - ஆசிரியர் விகிதப்படி மாணவர் எண்ணிக்கையைவிட அதிக ஆசிரியர்கள் உள்ளனர்.

குறிப்பாக, 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் இருக்க வேண்டிய நிலையில் பல பள்ளிகளில், 35 மாணவர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். இதையடுத்து, அதிகமாக உள்ள ஆசிரியர்கள், அங்கிருந்து மாற்றப்பட்டு, தேவை உள்ள பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர்.

ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுபோன்ற இடமாறுதல் செய்ய முடியவில்லை. எனவே, உபரியாக ஆசிரியர்கள் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது அந்தப் பணியிடங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வு பெறுவோர் பணியிடத்தில் புதியவர்களை நியமிக்காமல் அரசிடம் ஒப்படைக்குமாறு மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

3 comments:

  1. நல்லது வரவேற்க்கதக்கது,அரசு உதவி பெறும் பள்ளிகளில் அவர்களின் சொந்தங்களையும்,உறவினர்களை மட்டுமே கொண்டு ஆசிரியர் பணி நியமனம் செய்கிறார்கள் இது முறைகேடான முறை எனவே அரசு Trb வழியாக ஆசிரியர்களை நியமிக்கும் முறையை எதிர்காலத்தில் கொண்டு வரவேண்டும்.குறிப்பாக ALC சார்ந்த D.M பள்ளிகளில் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கின்றன.மேலும் மாணவர்களின் பெயரை பொய்யாக பதிவேட்டில் எழுதி கணக்கு காட்டினார்கள் ,ஆனால் இப்பொழுது ஆதார் எண் வந்ததால் மாணவர்களின் பெயரை பொய்யாக எழுத முடியாமல் மாட்டிக்கொண்டார்கள்.

    ReplyDelete
  2. Next news all private cbse/metric school under takeing in indin/tn govt.ethutaan super news...

    ReplyDelete
  3. Indian govt./tn govt.last news seithaa adhavida sorgam...kandippa vera yathum erukkumaanu theriyala friends...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி