புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்தாக வாய்ப்பு இல்லை : அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Nov 28, 2018

புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்தாக வாய்ப்பு இல்லை : அமைச்சர் செங்கோட்டையன்


2018-19-ம் கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு அரையாண்டு
பொதுத்தேர்வுகள், வரும் டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 22 வரை நடைபெறும் என பள்ளிக்கல்வி இயக்குனர் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அப்போது வெளியிட்ட செய்தியில், இந்த ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு வரும் டிசம்பர் மாதம் தொடங்குகிறது.

அதாவது வரும் டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 22 வரை தேர்வு நடக்கும்.
இந்த தேர்வுகள் அனைத்தும் குறிப்பிட்டுள்ள தேதியில் காலை 10 மணிக்கு தொடங்கும். 10 மணியில் இருந்து 10.10 மணி வரை வினாத்தாளை படிப்பதற்கும், 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளின் முதல் பக்கத்தை நிரப்புவதற்கும், 10.15 மணி முதல் 12.45 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதில் எந்தவித மாற்றம் இன்றி தேர்வுகள் நடத்தப்படும் என அவர் தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, கஜா புயலால் கடந்த இரண்டு வாரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டுமே அரையாண்டு தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக, தமிழக பள்ளி கல்வித் துறை ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், 10 நாட்களுக்கு பிறகு, தலைமைச் செயலகத்துக்கு வந்த அமைச்சர் செங்கோட்டையன், கல்வி துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து விவாதித்தனர்.

 இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்தாக வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. தமிழகத்திலேயே முதன் முறையாக முதுநிலை வேதியியல் ஆசிரியர் தேர்வுக்கான பயிற்சி முற்றிலும் தமிழ் வழியில்.வகுப்புகள் துவங்கும் நாள்: 08-12-2018 (சனிக்கிழமை)நேரம்: காலை 10.00 மணிபயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களின் ஆதார் அடையாள அட்டையை புகைப்படம் எடுத்து அனுப்பி தங்களின் முன்பதிவை உறுதி செய்து கொள்ளவும். முன்பதிவு அவசியம்.அறிவார்ந்த ஆசான் பயிற்சி மையம்சபரி டிஜிட்டல் மாடியில் ( 3வது மாடி)தமிழ்க்களம் புத்தக நிலையம் அருகில்செநதுறை ரோடுஅரியலூர்.தொடர்புக்கு: 8778977614, 9942571857நன்றி.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி