அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்' அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2018

அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்' அறிவிப்பு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச., 4 முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்' என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துஉள்ளது.'ஊதிய உயர்வு நிலுவை தொகை வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்பது உட்பட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பாக, தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இந்த போராட்டங்களுக்கு பலன் இல்லாததால், நவ., 27 முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என, ஜாக்டோ - ஜியோ அறிவித்தது.

ஆனால், சங்க நிர்வாகிகள் இடையே, கருத்து ஒற்றுமை ஏற்படாததால், போராட்ட தேதி மாற்றப்பட்டது.இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், நவ., 16ல் கூடி ஆலோசனை நடத்தினர். அதில், நவ., 27க்கு பதில், டிச., 4 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.இதற்காக, மாநில அளவில், 20 ஒருங்கிணைப்பாளர்கள் இடம் பெறும் குழுவும், மாவட்ட வாரியாக, ஆறு பேர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட உள்ளது. இன்றும், நாளையும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூட்டம் நடத்தப்பட உள்ளது; 25ல், வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படுகிறது.வரும், 26 முதல், 30ம் தேதி வரை, மாவட்ட அளவில் போராட்ட பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. பின், ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாக, ஜாக்டோ - ஜியோ அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி