தரமான கல்வியே சிறந்த விளம்பரம் SMART Class Room தொடக்க விழாவில் இணை இயக்குநர் பேச்சு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2018

தரமான கல்வியே சிறந்த விளம்பரம் SMART Class Room தொடக்க விழாவில் இணை இயக்குநர் பேச்சு.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம்
சிதம்பரவிடுதி வடக்கு அரசு தொடக்கப் பள்ளியில் “அறிவுத்திறன் வகுப்பறை”
திறப்பு விழா மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் தலைமையில்
 நடைபெற்றது.

 தலைமையாசிரியர் த.சந்திரா அனைவரையும் வரவேற்று
பேசினார்.
அறிவுத்திறன் வகுப்பறையை
பள்ளிக்கல்வித்துறை
இணை இயக்குனர் திரு.பொ.பொன்னையா திறந்துவைத்துப் பேசினார்.
நல்ல பள்ளிக்களுக்கு விளம்பரம் தேவையில்லை. இந்தப்பள்ளியில் குழந்தைகளைச் சேர்த்தால் , பிள்ளைகள் நன்றாகப் படிக்கும் என்னும் பெற்றோர்களின் வார்த்தைகளைவிட பெரிய விளம்பரம் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டார்.மேலும் ”இப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக இப்பள்ளியில் மாணவர் கலந்தாய்வு குழு செயல்படுவது பாராட்டுக்குறியது.
ஆறு வருடங்களாக இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சதுரங்கப்போட்டியில்
வெற்றி பெறுகிறார்கள் என்பது பாராட்டுக்குறியது. இப்பள்ளியின் பெருமையை அறிந்து
வரும் ஆண்டுகளில் பலர் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்ப்பார்கள்”
என்றும் இணை இயக்குநர் பொ.பொன்னையா பாராட்டி பேசினார்.

 அறிவுத்திறன் வகுப்பறையை
ஐந்தாம் வகுப்பு மாணவர்களான நிவேதா, ஆர்த்தி இயக்கி காண்பித்து,
சிறப்பாக விளக்கம் கொடுத்ததை இணை இயக்குநர் வெகுவாகப் பாராட்டினார்
கிராமப்புற அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களும், உயர்தரமான கல்வியை
பெறும்வகையில், அறிவுத்திறன் வகுப்பறையை புலவர்.பழனி.அரங்கசாமி
நன்கொடையாக வழங்கினார். அறந்தாங்கி மாவட்டக்
கல்வி அலுவலர் திரு.கு.திராவிடச்செல்வம் பொன்னாடை அணிவித்து பாராட்டிப் பேசியபொழுது, ”சிதம்பரவிடுதி பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருவதை உணர்ந்து பெற்றோர்கள்
தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும். முதல் வகுப்பு மாணவர்கள் சிறப்பாக படிக்கிறார்கள்.
வேன் வசதி கொண்ட பள்ளி, மிதிவண்டி பரிசு கொடுத்த பள்ளி, வீடுகளில்
தொலைக்காட்சியை அணைத்து படிக்கச் செய்யும் பள்ளி“ என்று குறிப்பிட்டார்.

"அரசுப் பள்ளிகளிலேயே பள்ளி மாணவர்களுக்காக வேன் வாங்கிய ஒரே பள்ளி
இப்பள்ளி தான். இப்பள்ளிக்கு இன்னும் நிறைய உதவிகள் தேவை. அந்த வகையில்
தன்னார்வ நிறுவனங்கள்  இப்பள்ளியை தத்தெடுத்து, இப்பள்ளியை மேலும்
வளரச்செய்ய என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்” என்று
கல்வியாளர் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதிஷ்குமார் பேசினார்.

இவ்விழாவில் பள்ளி மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து 2  வருடங்களாக பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை வழங்கிவரும்
”கொடைவள்ளல்” சிங்கப்பூர் S.ஜெகநாதன் அவர்களை வட்டாரக் கல்வி அலுவலர்
திருமதி.சு.உமாதேவி பொன்னாடை போர்த்திப் பாராட்டினார்.


இவ்விழாவில் முதல் வகுப்பு மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு தமிழ் புத்தகம்,
ஆங்கிலப்புத்தகம், நூலகப் புத்தகங்கள், பத்திரிக்கைகள், செய்தித்தாள்களை படித்து
காண்பித்து அசத்தினர்.
இவ்விழாவில்  பள்ளித்துணை ஆய்வாளர் செல்வம்,
வட்டார கல்வி
அலுவலர்களான நடராஜன்,ஜேம்ஸ் ஆரோக்கியசாமி, துரையரசன்,துரைராஜன் , மன்ற மாநில துணைச் செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழா மேடையிலேயே இணை இயக்குநர் பொ.பொன்னையா பள்ளியின் கல்விபுரவலராக
இணைந்தார். அவரை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் கு.திராவிடச்செல்வம் மற்றும் பலரும்
கல்விப் புரவலர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.
விழா நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியர்களான அருண், இராஜேஸ்வரி, வினோ
ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழாவில் பிறபள்ளி ஆசிரியர்கள், ஊர்ப்பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் எனப் பல்துறையினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழா முடிவில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் அ.மணிமாறன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி