லஞ்ச புகார் - BEO கைது - 4 ஆண்டு சிறை: 4 ஆயிரம் அபராதம் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2018

லஞ்ச புகார் - BEO கைது - 4 ஆண்டு சிறை: 4 ஆயிரம் அபராதம் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


அரசு நிதியுதவி பள்ளி மோசடிக்கு உடந்தையாக இருந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் உள்ள ஒரு அரசு நிதியுதவி பள்ளியில் கடந்த 2015ல் மாவட்ட ஆய்வுக்குழு ஆய்வாளர் அப்துல்ஹக் ஆய்வு மேற்கொண்டார். இதில் கடந்த 2012 முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை போலியாக  கணக்கில் காட்டி, தலைமை ஆசிரியர் அரசு நிதியுதவி பெற்று  மோசடிகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

விசாரணையில், வாலாஜா கிழக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பூங்கோதை(47) இதற்கு உடந்தையாக  இருந்ததும் ெதரிந்தது. புகாரின் பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2015 ஆகஸ்ட் 27ல் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரி விசாரித்து, உதவி தொடக்க கல்வி அலுவலர் பூங்கோதைக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹4 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

இதையடுத்து பூங்கோதை வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஊழல் வழக்கு பதிவையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது, அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி