ஆசிரியர்கள் போராட்டம்: கட்சிகள் வேண்டுகோள் - kalviseithi

Dec 27, 2018

ஆசிரியர்கள் போராட்டம்: கட்சிகள் வேண்டுகோள்


போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை, முதல்வர் அழைத்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர்கள், வலியுறுத்தி உள்ளனர்.

அதன் விபரம்:தி.மு.க., தலைவர், ஸ்டாலின்: 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை முன் வைத்து, இடைநிலை ஆசிரியர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர்.2009 ஜூன் மாதத்திற்கு முன் நியமிக்கப்பட்டோருக்கும், அதன்பின் சேர்ந்தோருக்கும், 3,770 ரூபாய், சம்பள வித்தியாசம் உள்ளது.

போராடும் ஆசிரியர்களை அழைத்து பேசி, அவர்களின் ஊதிய முரண்பாட்டை, முதல்வர், நீக்க வேண்டும்.பா.ம.க., இளைஞர் அணி தலைவர், அன்புமணி: தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், இடைநிலை ஆசிரியர்கள், பாகுபாடின்றி கல்வி வழங்கும் நிலையில், அவர்களுக்கான ஊதியமும்,பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில், தமிழக அரசு, ஒரு தரப்பு ஆசிரியர்களுக்கு, மிகப்பெரிய அநீதியை இழைத்து வருகிறது.

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை, முதல்வர் அழைத்து பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.அ.ம.மு.க., துணைப் பொதுச்செயலர், தினகரன்: ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டியது, அரசின் கடமை.திரும்ப திரும்ப செய்வதாகக் கூறி ஏமாற்றாமல், கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு, அவர்கள்கூறியுள்ளனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி