எல்.கே.ஜி., துவங்கும் திட்டத்தில் இழுபறி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2018

எல்.கே.ஜி., துவங்கும் திட்டத்தில் இழுபறி


தமிழகத்தில், அரசு பள்ளிகளின் தரம், நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. குறிப்பாக, தொடக்கப் பள்ளிகளின் தரம் வேகமாக சரிந்து வருகிறது; 10க்கும் குறைவான மாணவர்களுடன், 1,500க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்குகின்றன. பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இருந்தாலும், பாடம் நடத்தாமல், ஓ.பி., அடிக்கின்றனர்.

இதனால், பெரும்பாலான பெற்றோர், அரசு தொடக்கப் பள்ளிகளை கைவிட்டு, தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கின்றனர். தொடக்க பள்ளிகள் சரியாக இல்லாததால், உயர்நிலை மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கை சரிகிறது. இந்த நிலையை மாற்ற, தொடக்க பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்புகளை அறிமுகம் செய்ய, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.இதற்காக, தொடக்கப் பள்ளிகளுக்கு அருகே இருக்கும், அங்கன்வாடிகளை இணைத்து, அங்குள்ள குழந்தைகளுக்கு, எல்.கே.ஜி., மற்றும், யு.கே.ஜி., வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இதற்காக, மாநிலம் முழுவதும், தொடக்க பள்ளிகள் அருகேயுள்ள, அங்கன்வாடிகளின் பட்டியல் மற்றும் விபரத்தை தரும்படி, தொடக்க கல்வித் துறை சார்பில், சமூக நலத்துறையிடம் கேட்கப்பட்டது.ஆனால், சமூக நலத்துறை அதிகாரிகள், அங்கன்வாடிகளின் பட்டியலை வழங்காமல், காலதாமதம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. அதேபோல, பட்டியல் கிடைத்த அங்கன்வாடிகளுக்கு சென்று, அவற்றில், எல்.கே.ஜி., வகுப்புகளை துவங்குவதற்கு, தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், பள்ளி கல்வித் துறையின்,எல்.கே.ஜி., வகுப்புகளை துவங்கும் திட்டம், பாதியிலேயே முடங்கியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி