GPF & TPF சந்தாதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் சேவைஅறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2018

GPF & TPF சந்தாதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் சேவைஅறிமுகம்


பொது, ஆசிரியர் சேமநலநிதி சந்தாதாரர்களுக்கு செல்லிடப்பேசி குறுஞ்செய்தி மூலம் தகவல் அளிக்கும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சேவையைப் பெற சந்தாதாரர்கள் செல்லிடப்பேசி எண்ணை இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும்.

இதுகுறித்து முதுநிலை துணை மாநில கணக்காயர் (நிதி) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொது சேமநல நிதி (ஜிபிஎப்), ஆசிரியர் சேமநலநிதி (டிபிஎப்) ஆகிய சந்தாதாரர்களுக்கு செல்லிடப்பேசி குறுஞ்செய்தி மூலமாக தகவல்கள் அளிக்கும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் கணக்கிலுள்ள இருப்புத் தொகைக்கான மாதாந்திர குறுஞ்செய்தி, சந்தா மற்றும் கடன் தொகைக்கான மாதாந்திர குறுஞ்செய்தி, கணக்கின் விடுபட்ட தொகை குறித்து மூன்று மாதத்துக்கு ஒருமுறை குறுஞ்செய்தி, விடுபட்ட தொகை பற்றிய விவரங்கள் சமர்ப்பிப்பதற்கான நினைவூட்டல் குறுஞ்செய்தி, கணக்கின் இறுதித் தொகை பெறுவதற்காக அனுப்பிய விண்ணப்பத்தின் தற்போதைய நிலை மற்றும் சந்தாதாரர் பிரதியை பதிவிறக்கம் செய்வதற்கான குறுஞ்செய்தி ஆகியவற்றைஅனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.


சந்தாதாரர்கள் இந்தச் சேவையை பயன்படுத்திக்கொள்ள தங்களுடைய செல்லிடப்பேசி எண்ணை www.agae.tn.nic.in  என்ற மாநில கணக்காயர் அலுவலக வலைதளத்தில் பதிவு செய்யவேண்டும்.
சந்தாதாரர் அறிவிப்புப் பிரதி அனுப்பப்படமாட்டாது:

ஓய்வுபெற்ற சந்தாதாரர்கள் தங்களுடைய கணக்கின் இறுதித்தொகை பெறுவதற்கான ஆணை அனுப்பப்பட்டது குறித்த சந்தாதாரர் அறிவிப்புப் பிரதி வருகிற 2019 ஜனவரி 1 ஆம் தேதி முதல் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.
மாறாக, மாநில கணக்காயர் அலுவலக வலைதளத்திலிருந்து சந்தாதாரர் அறிவிப்புப் பிரதியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதாவது www.agae.tn.nic.in என்ற வலைதளத்தில்  'know your GPF status'  என்ற மெனுவிலிருந்து இதைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

1 comment:

  1. GPF,TPF சந்தாதாரர்களுக்கு குறுஞ்செய்தி சேவை அறிமுகம் பல மாதங்களுக்கு முன்பே செய்து விட்டார்கள். CPS சந்தாதாரர்களுக்கு குறுஞ்செய்தி சேவை எப்போது அறிமுகம் செய்வார்கள்.CPS சந்தாதாரர்களுக்கு 2013 லிருந்து MISSING CREDITS இதுவரை சரி செய்யப்படவில்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி