கணினி ஆசிரியர்களின் பொதுக்கூட்டம்- திருவள்ளுவர் மாவட்டம் (செய்தி: 09-01-2019)... - kalviseithi

Jan 10, 2019

கணினி ஆசிரியர்களின் பொதுக்கூட்டம்- திருவள்ளுவர் மாவட்டம் (செய்தி: 09-01-2019)...
திருவள்ளூர் மாவட்ட மண்டல பொதுக்குழு கூட்டம் கணினி ஆசிரியர்கள் மண்டல பொதுக் கூட்டத்தில் தீர்மானம்
  கணினி அறிவியல் பாடத்தை தமிழக அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் (2019-20) நடைமுறைபடுத்த வேண்டுகிறோம்

கணினி அறிவியல் பாடத்தை பிரதான பாடமாக இளநிலை (ம) முதுநிலை பட்டம் பெற்று அவற்றில் பி.எட்., பட்டம் முடித்து அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கா 53,670 -க்கும் மேற்பட்டோர்  காத்து கொண்டிருக்கிறோம்.

Ø கணினி அறிவியலில் பி.எட்., பட்டம் பெற்றவர்களுக்கு TET, TRB, AEEO மற்றும் DEO தேர்வில் பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. NCTE-ன் விதிகளின்படி எந்தவொரு பாடப்பிரிவிலும் பி.எட்., பட்டம் பெற்றிருந்தால் TET ஆசிரியர் தகுதி தேர்வு எழுத போதுமானது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் TNTET, AEEO, DEO, TRB போன்ற ஆசிரியர் தேர்வுகளுக்கு கணினி அறிவியல் பாடத்திற்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவது மிகவும் வேதனை அளிக்கும் நிகழ்வாக உள்ளது.

Ø கணினி அறிவியல் பாடத்தை பிரதான பாடமாக (Major Subject) எடுத்து படித்ததனால் எங்களால் 1-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு சிறப்பாக கற்பிக்க முடியும். 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை சிறப்பாக கற்று கொடுத்தால் தான் +1 மற்றும் +2 வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தின் முழுமையான அறிவை மாணவர்கள் பெற முடியும்
அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய 9,00,0000  மாணவர்களின் கணினி அறிவியல் கல்வி மற்றும் 60000-க்கும் மேற்பட்ட பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கவும் எங்கள் கோரிக்கையை தங்கள் முன் சமர்பிக்கின்றோம்.
1) சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணினி அறிவியல்  பாடத்தை, மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக அச்சிட்டப்பட்ட (6-ம் வகுப்பு முதல் 10-ம் வரை) பாட புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

2) கணினி அறிவியலை பிரதான பாடமாக (Major Subject) எடுத்து படித்து B.Ed., பட்டம் பெற்றவர்களை பள்ளிக்கு  ஒரு  கணினி  ஆசிரியர்  என்ற வகையில் பணி நியமனம் செய்ய வழிவகை செய்திடல்  வேண்டும்.
3) B.Ed., பட்டம் அடிப்படை தகுதியாகக் கொண்ட ஆசிரியர் தேர்வுகளான TET, AEEO, DEO அனைத்திற்கும் கணினி அறிவியலில் பி.எட்., படித்தவர்களை இந்த தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.
4) தற்பொழுதுள்ள அசாதாரண சூழ்நிலையில் கணிப்பொறியின் பயன்பாடு உள்ளது. எனவே அதற்கு ஏற்ப கிராமப்புற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் விழிப்படைய செய்ய அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடம் தோற்றுவித்து பி.எட்., கணினி ஆசிரியர்களை நியமனம் செய்வதன் மூலம் இவர்களின் கணினியைப் பற்றி அடிப்படை அறிவு மற்றும் பயன்பாட்டு அறிவை மேம்படுத்த முடியும்
5) 2006-ஆம் ஆண்டிலிருந்து புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறியவியல் பாடப்பிரிவு இல்லை. அங்கு கணினி அறிவியல் பாடப்பிரிவை  கொண்டுவந்து மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
6) அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை  மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரப்பிட வேண்டும்.
6) மத்திய அரசின் திட்டத்தின் கீழ்: புதிய கல்விக் கொள்கை, டிஜிட்டல் இந்தியா, SSA, RMSA திட்டத்தில் ஆரம்ப பள்ளி முதலே கணினி அறிவியலை கட்டாயப்பாடமாக அறிவிக்க வேண்டும். "கணினி  அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால் இந்தியாவில் வாழும் கோடிக்காணக்கான  கிராமப்புற அரசு பள்ளி ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள்".
வரும் கல்வி ஆண்டில் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை என்றால் மாநிலம் தழுவிய தொடர் போராட்டம் நடத்துவதாக முடிவு செய்துள்ளோம்.
  பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ஆலோசனைக் கூட்டத்தை சிறப்பாக நடத்திய கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் "தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின்" சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்  🙏
  திருவள்ளுவர்  நிகழ்வு தலைமை :-
திரு., மணிகண்டன் Cell  :97861 76335திருராஜசேகர்
திருவள்ளுவர் மகளிரணி நிகழ்வு தலைமை தேவிஅவர்கள்.

🎙 மண்டல மண்டல பொதுக்குழு கூட்டம்  தோழமைசங்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டுசிறப்பித்தார்கள் அவர்களுக்கு நெஞ்சார்ந்தநன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

1 comment:

  1. ஒக்க மக்கா இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க, வாங்க நாங்களும் இருக்கோம். இப்பவே ஆரம்பிப்போம் 2019-20ம் கல்வியாண்டில் கணினி கணினி அறிவியல் பாடத்தை, மீண்டும் நடைமுறைப்படுத்த வைப்போம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி