Flash News : ரூ.1000 பொங்கல் பரிசு அனைவருக்கும் வழங்க தடை- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி - kalviseithi

Jan 9, 2019

Flash News : ரூ.1000 பொங்கல் பரிசு அனைவருக்கும் வழங்க தடை- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடிபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் தாக்கல் செய்தள்ள மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழக அரசு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருமானம் உள்ளிட்ட எந்த ஒரு பாகுபாடின்றி, ரூ.1000-த்தை பொங்கல் பரிசாக வழங்குகிறது. ஏற்கனவே, கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை முடிக்காத நிலையிலும், அதற்கு மிகப்பெரிய நிதி தேவைப்படும் சூழ்நிலையிலும், இதுபோல பொதுமக்கள் அனைவருக்கும் ரொக்கப்பரிசு வழங்கினால், அது தேவையில்லாத நிதி சுமையை அரசுக்கு ஏற்படுத்தும்.

நலத்திட்டங்களை உருவாக்கி பொதுமக்களுக்கு மாநில அரசு வழங்கலாம். அதுகூட பொருளாதார நிலையின் அடிப்படையிலேயே உருவாக்க வேண்டும். அதற்காக அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்குவது ஏற்க முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த பின்னர், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்குக்கும் ரூ.1000 வழங்கப்படுவது ஏன்? என கேள்வியெழுப்பியதுடன் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கக்கூடாது எனவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதனால் வெள்ளை நிற ரேசன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 

19 comments:

 1. ஆக்கபூர்வமான திட்டங்களை கொண்டு வர வேண்டும்
  நட்பின் வழியில்
  சோலச்சி புதுக்கோட்டை

  ReplyDelete
 2. இந்த தடைக்கு முழு காரணம் திமுக தான் இனிமேல் ஒரு ஓட்டு கூட திமுக வுக்கு கிடையாது

  ReplyDelete
  Replies
  1. Exam la pass pannavangaluku posting poda money illa. Ithuku mattum enga irunthu vanthathu nithi. Intha 1000 illama nanga ithu varai pongal kondada villaiya ...

   Delete
  2. idhuthan rajathandhiram boss ............

   Delete
  3. yen 1000 election varumpothu kudukanum..?1000 kudutha kaalam pura life oduma..?etha(posting)seiyanumo atha seiyama election kaga 1000 kudutha yar case podama irupa..ipadiyea ilavasatha vachayea padichavan life la vilayadurathu velayapochu..ipadi vote ku 100 200 nu vaankitu vote potathaalathan padichavan life innaiku nadutheruvil..

   Delete
  4. DMK Ku vote Pottalum nasamathan pokum

   Delete
 3. இலவசங்கள் ஒரு சாபக்கேடு....

  ReplyDelete
 4. வரவேற்க்கத்தக்கது

  ReplyDelete
  Replies
  1. பள்ளி வேலை நேர கால அட்டவணை பதிவிடவுட்

   Delete
 5. நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு இந்த அரசு ஓட்டுக்கு சொந்த பணத்தை தரமால் மக்களின் வரி பணத்தை கொடுத்து ஏமாற்றி வெற்றி பெற்று கொள்ளலாம் என்று நினைத்தது. அதற்கு நீதி மன்றம் தக்க பதிலடி கொடுத்து உள்ளது

  ReplyDelete
 6. 50,000 ரூபாய் 60,000 ரூபாய் சம்பளம் வாங்குபவர்களுக்குக் கூட பொங்கள் பரிசு கிடைக்கின்றது. இது ஏற்புடையதல்ல உன்மையிலேயே வருமை கோட்டிற்க்கு கீழே உள்ளவர்களுக்கு பொங்ல் தொகுப்பு வழங்கினால் ஏற்றுக்கொள்ளலாம்.
  இது அடுத்து வரும் தேர்தலை குறிவைத்து வழங்குவதாக மக்கள் அனைவரும் வெளிப்படையாக தெரிவிக்கின்றனர்.

  ReplyDelete
  Replies
  1. s u r correct..ithu la irunthu intha 1000 m vote kuthanu puriyatha..?

   Delete
 7. makkal panamthan enjoy pannugappa innu one or two month govt maybe dissolve .........

  ReplyDelete
 8. தி.மு.க.நினைப்பது தங்கள் குடும்பம் மட்டுமே வாழ எதையும் செய்ய தயார!அதன் தொடர்ச்சியே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ1000/-கிடைக்கக்கூடாது நினைத்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளனர்.இலங்கைதமிழர் சுமார் 1,50,000/-இறப்புக்கு மிக முக்கிய காரணம் இவர்கள்.மக்களுக்கு கிடைக்கும் இந்த ரூ1000/-அவர்களுக்கு பெரிய விஷயமா? புரிந்து கொள்ளுங்கள்.

  ReplyDelete
 9. வேலை வாய்ப்பை கொடுக்காமல் பணத்தை கொடுத்து மக்களை முட்டாளாக்குவது தவறு. திமுக நல்லதா கெட்டதா தெரியாது. நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்கினார்கள். படித்தவர் முதல் பாமரர் வரை நேர்மையாக உழைத்து சம்பாதிக்க வழிவகை செய்தார்கள். அது நல்ல கொள்கை. எல்லாருக்கும் வேலை இருந்தா நாட்டுல திருட்டு முதலிய குற்றங்கள் குறையும்.

  ReplyDelete
 10. posting a iluthadichu padichavan life a dmk govt naachamakala..verum 1000 kuduthu election la vote vaankira thitam palikala..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி