தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை வரும் 22ம் தேதியில் இருந்து ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்! - kalviseithi

Jan 13, 2019

தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை வரும் 22ம் தேதியில் இருந்து ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்!


 தமிழக அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஐகோர்ட்டில் அளித்த தங்களது உத்தரவாதத்தை திரும்ப பெற்று, வருகிற 22ந்தேதி முதல்  காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்தது.

 பழைய பென்ஷன் திட்டத்தை தொடர வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த டிச. 4 முதல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். இந்த போராட்டத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தும், தடை விதிக்கக்கோரியும் இரு மனுக்கள் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை டிச. 3ல் ஐகோர்ட் மதுரை கிளை விசாரித்தது.  அப்போது நீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று, வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கவில்லையென ஜாக்டோ-ஜியோ உத்தரவாதம் அளித்தது.

இதையடுத்து, அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றம் தொடர்பாக கடந்த 21.9.2017ல் பிறப்பித்த நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு எடுத்த அரசின் நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டது. பின்னர், அரசு தரப்பில் பழைய பென்ஷன் திட்டம் தொடர்பான ஸ்ரீதர் கமிட்டியின் அறிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. அரசு நிதி பற்றாக்குறையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து, பழைய பென்ஷன் திட்டம் தொடர்பான தர் கமிட்டி அறிக்கை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மற்றும் ஊதிய முரண்பாடுகள் மற்றும் 21 மாத அகவிலைப்படி (அரியர்ஸ்) வழங்குவது குறித்து விசாரித்த சித்திக் குழுவின் அறிக்கையையும் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ‘‘பழைய பென்ஷன் தொடர்பான ஸ்ரீதர் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க 6 மாத கால அவகாசம் வேண்டும்.

சித்திக் குழு அறிக்கை மீதான நடவடிக்கைக்கு  4 வாரம் அவகாசம் வேண்டும்’’ என்றார். அப்போது ஜாக்டோ - ஜியோ சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘‘எங்களது போராட்டம் கடந்த டிசம்பரிலேயே முடிவு செய்யப்பட்டது. நீதிமன்றம் கேட்டுக்கொண்டதால் இரண்டாம் முறையாக கைவிடப்பட்டது. ஏற்கனவே ஒரு முறை போராட்டத்தை கைவிட்டோம். அரசும், தலைமை செயலரும் நீதிமன்றத்தில் ஆஜராகி உறுதி அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேண்டுமென்றே காலம் தாழ்த்துகின்றனர். இப்போது அவகாசம் கேட்கும் காலத்தில் பள்ளி தேர்வுகளும், நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளும் துவங்கி விடும். இதனால், நீதிமன்றத்தின் மூலமும் தீர்வு கிடைக்காத நிலையே ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களது போராட்டத்தை தொடர்வதே சரியாக இருக்கும்’’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘‘கமிஷன் அறிக்கை, அரசின் அறிக்கையைப் போல உள்ளது’’ என்றனர். பின்னர், சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்க நீதிபதிகள் அவகாசம் அளித்தனர். இதன்பிறகு சங்க தரப்பு வக்கீல், ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். அதில், போராட்டத்தை துவக்கவில்லையென ஏற்கனவே அளிக்கப்பட்ட உத்தரவாதத்தை திரும்ப பெற்றுக் ெகாள்வது என நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

பின்னர், நீதிபதிகள் முன் ஆஜரான மூத்த வக்கீல், ‘‘நீதிமன்றத்துக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு ஆகியும் தீர்வு கிடைக்கவில்ைல. இதனால் அரசை எதிர்த்து போராட்ட களத்தில் இறங்குவதே சரியாக இருக்கும். எனவே, எங்களது உத்தரவாதத்தை திரும்ப பெறுகிறோம்’’ என்றார்.

இதை ஏற்ற நீதிபதிகள், சித்திக் கமிஷன் அறிக்கை அடிப்படையில் அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜன. 28க்கு தள்ளி வைத்தனர்.
நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை அரசு ஊழியர்கள் திரும்ப பெற்றதன் மூலம், ஏற்கனவே அறிவித்தபடி ஜன. 22ந் தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மீண்டும் தொடங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

12 comments:

 1. 24 மணி நேரமும் சதா இதே சிந்தனையிலதான் இருப்பிங்க போல!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் அரசு ஊழியர் இல்லையா?

   Delete
  2. சார் !👌 என் வீட்டீல் இரண்டு பேர் கடமை தவறாத அரசு ஊழியர்கள் ! 👌👌

   Delete
 2. 11, 12 மாணவர்கள் மற்றும் சென்ற ஆண்டு 12 முடித்து வெளியில் சென்ற மாணவர்கள் என லட்சக்கணக்கான மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்க உள்ளார்கள். கடும் நிதி நெருக்கடியிலும் மாணவர்கள் நலன் கருதி கொடுக்க உள்ளார்கள். 9, 10 மாணவர்களுக்கும் கொடுக்க உள்ளார்கள் என்கிறார்கள். பள்ளியில் அணைத்து வேலைகளும் கணிப்பொறி மூலமாக குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டும். இதையெல்லாம் செய்ய பகுதி நேர ஆசிரியர்கள் வேண்டும். மாணவர்கள் நலன் கருதி 11, 12 வகுப்பிற்கு பாடம் நடத்த பகுதி நேர ஆசிரியர்கள் வேண்டும். ஸ்ட்ரைக் நடந்தால் பகுதி நேர ஆசிரியர்கள் கண்ணுக்கு தெரிவார்கள். இப்படி எல்லாமே செய்து வரும் இவர்களுக்கு சம்பளம் கொடுக்க எவருக்கும் தெரியாது. கேட்டால் நிதி நெருக்கடி. குடும்பத்தையும் பட்டினி பல வருசமா போட்டு இவர்களுடைய வயிற்றில் அடித்து நன்கு வாழ்கிறார்கள். கணிப்பொறி பாடம் நடத்த ஆசிரியர்கள் நியமனம் செய்யாமலேயே கணிப்பொறி மாணவர்கள் கல்வியும் கற்றுக் கொடுக்க படுகிறது. வேலைகளும் நடக்கிறது. நிதி நெருக்கடி.... புதிய படங்கள்.....

  ReplyDelete
  Replies
  1. Poi exam eluthi pass panni velaikku vanga

   Delete
  2. எத்தனை தேர்வு வைத்துள்ளார்கள்? ஏன் இப்படி தேர்வு செய்து வயிற்றில் அடிக்கிறார்கள்? 7 வருடமா இப்படி நோகடிக்கிறார்களே இது உங்களுக்கு தெரியாதா? திறமை இல்லாமல் இருக்கிறார்கள் என்று எந்த பள்ளியிலாவது சொன்னதுண்டா? பிள்ளைகளை படிக்க வைக்க கஷ்டப்படும் நேரத்தில் உங்களுக்கு என்ன கஷ்டம் என்று தெரியவில்லை.

   Delete
 3. Yenna sir poi sir school la work pandra hm yelarukum theriyum sir avaga Manasa thottu soila soiluga part time teachers la waste qualified illanu padara kastam egaluku matudha theriyum sir.

  ReplyDelete
  Replies
  1. First yeen Nenga Antha job ku poninga . Tnpsc Eluthi polam illa.

   Delete
 4. High school and higher secondary school la work yelam computer based adhala pandradhu part time computer teachers dha EMIS,free laptop online work, scholarship online work , shaalashidhi,power finance,bio metric,free scheme indent, deo office letter CEO work, maximum school la salary work,then students ku class yedukanum staffs strike pana use panika yela work kum part time teachers theriyum ana job conformation pathinaga keta amount illa nu soiluvaga nagala yedho qualified illa nu pesaradhuku oru group silar exam eludhivaganu oru group

  ReplyDelete
 5. Exam eluthi Vara group maximum tet pass panirupaga 2013 la avagaluku oru China request nega ye again posting kekariga sir nega pass agi 5 year achi valid mudichirichi sir again test vacha exam attend pana negalam ready ah sir soiluga nagalum exam eludhivaganu job Vara ready.konjam manasatchiyoda pesuga nega unga pakam Iruka neyathukaga poradariga naga yegalukaga poradurom ungala support pana kekala adha kedukaradhukum kevalama pesavum nenaikadhiga

  ReplyDelete
 6. அய்யா ஒரு வேலை நீங்கள் மறுபடியும் புதிதாக தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பின்னர் சில நாட்களில் ஏதோ ஒரு காரணத்திற்காக அத்தேர்வு செல்லாது என்று கூறினால் நீங்கள் மறுபடியும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பின்னர் தேர்வு எழுத ரெடியா. அனைவருக்கும் மனசாட்சி உண்டு.அரசு செய்யும் தவறுக்கு நாம் நம்மை இழிவு படுத்தி வேண்டாம்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி