பிளஸ் 2 செய்முறை தேர்வு: நாளை மறுநாள் துவக்கம் - kalviseithi

Jan 30, 2019

பிளஸ் 2 செய்முறை தேர்வு: நாளை மறுநாள் துவக்கம்


பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, நாளை மறுநாள் துவங்குகிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்க உள்ளது.

அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் போராட்டத்தால், பாடங்கள் நடத்தப்படாமல் உள்ளன. ஆனால், தனியார் பள்ளிகளில்,தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தி, மாணவர்கள் தயார் செய்யப்படுகின்றனர். இந்நிலையில், பிளஸ் 2மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, பிப்., 1 துவங்கி, 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு முன், மாணவர்களின் அகமதிப்பீட்டுக்கான பட்டியலை தயாரிக்கவும், அகமதிப்பீட்டுக்கு, மாணவர்களின் செய்முறை நோட்டுகளை மதிப்பிடவும், தேர்வு துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

நாளை மறுநாள் துவங்க உள்ள, செய்முறை தேர்வுகளுக்கு, வேறு பள்ளிகளில் இருந்து, மதிப்பீட்டு ஆசிரியர்களை நியமித்து, கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்; எந்த முறைகேடுகளுக்கும் இடம் அளிக்கக் கூடாது. ஆசிரியர்கள், தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை,மாணவர்களுக்கான தேர்வு நடத்துவதில் காட்டக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 1க்கு புதிய தேதிஇந்நிலையில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பிப்., 13 முதல், 22 வரை, செய்முறை தேர்வு நடத்தி, உரிய மதிப்பெண் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி நேற்று தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி