தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை : தலைமைச் செயலர் எச்சரிக்கை - kalviseithi

Jan 29, 2019

தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை : தலைமைச் செயலர் எச்சரிக்கை


தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து தலைமைச் செயலக ஊழியர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தையும், பிப்ரவரி 1 முதல் தொடர் வேலை நிறுத்ததில் ஈடுபடப் போவதாகவும் தலைமைச் செயலக ஊழியர் சங்கத் தலைவர் அந்தோணிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நாளை பணிக்கு வராத தலைமைச் செயலக ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவித்துள்ளார். ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக பகுதிநேர மற்றும் தினக்கூலி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். ஊழியர்களின் வருகைப்பதிவு விவரங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காலை 10:30 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் காலை, மாலை 2 வேளைகளில் வருகையை உறுதிப்படுத்த கையெழுத்திடவும் ஆணையிட்டுள்ளார். மேலும் தற்காலிக விடுப்பு எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாததால் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி