ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் திடீர் திருப்பம்: மெட்ரிகுலேஷன் சங்கமும் ஆதரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2019

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் திடீர் திருப்பம்: மெட்ரிகுலேஷன் சங்கமும் ஆதரவு


ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று  முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து வருவதால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் நேற்று  இயங்கவில்லை.

இந்த நிலையில் போராட்டம் முடிவுக்கு வரும் வரை தமிழகம் முழுவதும் ஆசிரியர் பயிற்சி படிக்கும் மாணவ மாணவியர்களை கொண்டு அரசு பள்ளிகளில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.அதுமட்டுமின்றி போராட்டத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொள்ளாததால் அவர்களை வைத்து அரசு பள்ளிகளில் வகுப்பு எடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளதக அதன் பொதுச் செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அரசு பள்ளிகளுக்கு ஒரு ஆசிரியரை கூட தனியார் பள்ளிகள் அனுப்பக் கூடாது என்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு நந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்

1 comment:

  1. அமெரிக்கா அதிபர் டிரம்ப்ம் ஆதரவாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி