சாலை விதிகளைக் கடைப்பிடிக்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2019

சாலை விதிகளைக் கடைப்பிடிக்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி


அடிப்படை சாலை விதிகளைப் பின்பற்ற 7,870பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மன்றம் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.

சட்டப் பேரவையில் போக்குவரத்துதுறை மானியக் கோரிக்கையின்போது, தமிழகத்தில் உள்ளஅனைத்து அரசுமற்றும் அரசு சார்ந்த உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சாலை பாதுகாப்பு மன்றம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்தநிலையில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டு மன்றத்தை தொடங்கி வைத்தனர்.இதையடுத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியது:தமிழகத்தில் அதிகமான சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவேஇளம் சிறார்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது.அந்த சிறார்கள் சாலை பாதுகாப்பை தாங்கள் மட்டும்பின்பற்றாமல், தங்களுக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள்மற்றும் சுற்றத்தாரிடம் காலப்போக்கில் கொண்டு செல்வார்கள். எனவே, பள்ளிகளில் சாலை பாதுகாப்புமன்றம் உருவாக்குவதுமுக்கியத்துவம் வாய்ந்ததாகும்.இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள 7, 870 அரசுப் பள்ளிகள், அரசு சார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சாலை பாதுகாப்பு மன்றம் உருவாக்க தமிழகஅரசு கடந்த டிச.31-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.அதன் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை பள்ளியில் பயிலும் இளம் சிறார்களிடையே ஏற்படுத்த, அவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் அடிப்படை சாலை விதிகளைப் பின்பற்ற பயிற்சிஅளிக்கப்படும் என்றார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி