ஒரு மாதத்திற்கு 100ஜிபி; 3 மாதத்திற்கு இலவசம் -ஜியோ ஜிகாஃபைபரின் அதிரடி ஆஃபர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2019

ஒரு மாதத்திற்கு 100ஜிபி; 3 மாதத்திற்கு இலவசம் -ஜியோ ஜிகாஃபைபரின் அதிரடி ஆஃபர்!



தகவல் தொழில்நுட்பத் துறையில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப, பல்வேறு அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

ஜியோ ஜிகா ஃபைபர் சேவை

ஜியோ வாய்ஸ் கால் மற்றும் இணைய சேவை வெற்றி பெற்றதையடுத்து, அந்த வரிசையில், மக்களை கவர 'ஜியோ ஜிகா ஃபைபர்' என்ற அதிரடி ஆஃபரை கொண்டு வருகிறது ஜியோ நிறுவனம். ஜியோவின் இந்த ஜிகா ஃபைபர் சேவை(Jio GigaFiber) வெகு விரைவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

முன்பதிவு செய்வது எப்படி?

ஜியோ ஜிகா ஃபைபர் சேவைக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது. இதற்கு Myjio அல்லது jio.comல் முன்பதிவு செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக 15 முதல் 20 நகரங்களில் இந்த சேவை சோதனை செய்யப்படவுள்ளது. தொடர்ந்து 1,100 நகரங்களில்சேவை வழங்கப்படும் என்றும் அதைத்தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக கொண்டு வரப்படும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜிகா ஃபைபர் சேவையின் பலன்?

இணைய சேவை 100 Mbps வேகத்தில் ரூ.699க்கு ஒரு மாதத்திற்கு 100GB வழங்கப்படும். அதன்பின்னரும் தேவைக்கேற்ப 40GB என்ற முறையில் டாப் அப் செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக 3 மாதத்திற்கு இலவச சேவை வழங்கப்பட இருப்பது தான் இந்த திட்டத்தின் சிறப்பம்சம். முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு 100GB இணைய சேவை முழுவதும் இலவசமாக வழங்கப்படும்.இதற்கான வை-பை உபகரணத்தின் விலை ரூ.4200. இந்த தொகை திரும்ப பெறத்தக்கது (refundable security deposit) என்று ஜியோ நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை இன்ஸ்டால் செய்வதற்கென தொகை எதுவும் வசூலிக்கப்பார்த்து என்றும் நிறுவனம் தரப்பில்உறுதிபட கூறப்பட்டுள்ளது.இதனை வை-பை உபகரணத்தை வீட்டில் செட் செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட மொபைல்/லேப்டாப்பில் கனெக்ட் செய்துகொள்ளலாம்.

இந்த ஜியோ ஜிகா ஃபைபர் ப்ரிவியூ ஆஃபர் வெகு விரைவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி