அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த, நீட் தேர்விலிருந்து விலக்கு பெற உள்ளிட்ட கூட்டணிக்காக அதிமுகவிடம் பாமக முன்வைத்த 10 கோரிக்கைகள்: - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 20, 2019

அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த, நீட் தேர்விலிருந்து விலக்கு பெற உள்ளிட்ட கூட்டணிக்காக அதிமுகவிடம் பாமக முன்வைத்த 10 கோரிக்கைகள்:


தமிழக மக்களின் நலனுக்காக முன் வைக்கப்பட்ட10 கோரிக்கைகளின் அடிப்படையிலேயே அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.அதிமுக கூட்டணியில் பாமக இறுதி செய்யப்பட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, பாமக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மேலும், ஒரு ராஜ்யசபா சீட்டும் பாமகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தவிர, வரும் 21 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு தெரிவித்துள்ளது.

இதையடுத்து அதிமுக கூட்டணியில் இணைவதற்காக,மக்கள் நலனுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் 10 கோரிக்கைகளை  முன்வைத்ததாக ராமதாஸ் தெரிவித்தார்.

அந்த 10 கோரிக்கைகள்:

* காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்டவேளாண் மண்டலங்களாக அறிவித்தல்.

* கோதாவரி - காவிரி பாசனத்திட்டம் மற்றும் 20 பாசன திட்டங்களை நிறைவேற்றுதல்.தமிழகத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

* 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.

* படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

* மணல்குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும்.

* அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல்.

* மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை தடுக்க வேண்டும்.

* பொதுத்துறை , கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

* நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும்.

4 comments:

  1. நிறைவேறா கோரிக்கைகள்..

    ReplyDelete
  2. நம்பாதீர்கள்......உலகிலேயே நம்பர் ஒன் திருடன் ராமதாஸ்......


    ReplyDelete
  3. Consolidated staff pathi onnumey pesala ana vai kiliya naga job vandha conform panuvanu soina

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி