வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.2000 உதவித்தொகை: பேரவையில் முதல்வர் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2019

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.2000 உதவித்தொகை: பேரவையில் முதல்வர் அறிவிப்பு!


தமிழகம் முழுவதும் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி பேரவையில் அறிவித்தார்.


பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று காலை மீண்டும் கூடியது.  இன்று பேரவை கூடியதும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர், தமிழகம் முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து ஏழை எளிய தொழிலாளர் குடும்பங்களுக்கும் ரூ.2000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.

கஜா புயல், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கைத்தறி தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக அவர் கூறினார். தமிழகம் முழுவதும் 60 லட்சம் குடும்பங்களுக்கு இந்த சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் 35 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்களும், நகர்புறங்களில் 25 லட்சம் தொழிலாளர் குடும்பங்களும் பயனடைய முடியும். சிறப்பு உதவித்தொகைக்காக ரூ.1200 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது என பே

2 comments:

  1. 2000 கொடுக்க நிதி எங்கு இருந்து வரும்

    ReplyDelete
  2. எலக்சன் லஞ்சம்.....வாங்கிட்டு உங்களுக்கு ஓட்டு போட மாட்டாங்க..... புளி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி