இன்னும் 49 நாட்களே அவகாசம்: 'TNTET' தேர்ச்சியடையாதோர் கவலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2019

இன்னும் 49 நாட்களே அவகாசம்: 'TNTET' தேர்ச்சியடையாதோர் கவலைடெட் தேர்வில் தேர்ச்சியடையாத ஆசிரியர்களுக்கு, இனியும் 49 நாட்களே அவகாசம் உள்ளதால், பணி வாய்ப்பு கேள்விக்குறியாகும் வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி,ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டுமென, 2010ல் அரசு உத்தரவிட்டது. இதை பின்பற்றி, 2011ல் மாநில அரசு அரசாணை வெளியிட்டது.

இவ்விரு அரசாணைகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், நலத்துறை பள்ளிகளில் பணி புரிவோருக்கு, டெட் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டது.அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டும், அரசாணை வெளியிடுவதில் தாமதம் நீடிக்கிறது.அதோடு, தனியார் பள்ளிகளில் பணிபுரிவோரும், மார்ச், 31ம் தேதிக்குள், டெட் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டுமென, கல்வித்துறை வலியுறுத்தி வருகிறது.

இதற்கு இனியும், 49 நாட்களே அவகாசம் உள்ளது. ஆண்டுக்குகுறைந்தபட்சம் ஒருமுறையாவது நடத்த வேண்டிய டெட் தேர்வுக்கு, கடந்தாண்டு அறிவிப்பு இல்லை. இதனால் தகுதித்தேர்வில் தோல்வியடைந்தோர், பீதியில் உள்ளனர்.அவகாசத்தை நீட்டிக்கணும்தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர்கூறுகையில்,'2017ம் ஆண்டுக்குப் பின், டெட் தேர்வு அறிவிக்கப்படவில்லை.

இத்தேர்வில் தேர்ச்சி அடைந்தோருக்கும், தனியார் பள்ளிகளில் சொற்ப ஊதியமே வழங்கப்படுகிறது. டெட் தேர்வு அறிவிப்பே வெளியிடாததால், இறுதி கால அவகாசம் நீட்டித்து வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளில் பணிபுரிவோருக்கான ஊதிய விகிதம் நிர்ணயித்து, அதை பின்பற்ற பள்ளிகளுக்கு, உத்தரவிட வேண்டும்' என்றனர்.

9 comments:

 1. விலக்கு ரெடியாகிவிட்டது விரைவில் அறிவிப்பு வருகிறது

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. தேர்வு நடத்தவே அருகதை இல்லாத ஆட்சி

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி