ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு திரும்பிய கல்லூரிப் பேராசிரியர்கள் 25 பேர் நேற்று திடீரென பணியிடை நீக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2019

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு திரும்பிய கல்லூரிப் பேராசிரியர்கள் 25 பேர் நேற்று திடீரென பணியிடை நீக்கம்!


ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு திரும்பிய கல்லூரிப் பேராசிரியர்கள் 25 பேர் நேற்று திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அதிர்ச்சி  அடைந்துள்ளனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் கடந்த மாதம் நடந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங்கள் பங்கேற்றன. அந்த போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர அரசுத்  தரப்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறிப்பாக 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. பள்ளிக் கல்வித்துறை மற்றும் தலைமைச் செயலகம் சார்பில் 31ம் தேதி வரை கால  அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பேரில் 30ம் தேதியில் இருந்தே ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர். வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்வர்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு   சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் சஸ்ெபண்டு செய்யப்பட்டனர். அவர்கள் இன்னும் பணிக்குத் திரும்பாத நிலையில், அவர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கேட்டு  வருகின்றனர்.

இந்நிலையில், அவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்வது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகம் முழுவதும் அரசின் நடவடிக்கை ஒருபுறம் தொடர்கிறது.  இதன் அடிப்படையில் கல்லூரிப் பேராசிரியர்கள் 25 பேர், ஆசிரியர் பணியல்லாத ஊழியர்கள் 2 பேர் என நேற்று 27 பேரை சஸ்பெண்டு செய்து சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

 கடந்த மாதம் 31ம் தேதியில் இருந்து  எல்லோரும் பணிக்கு திரும்பிய நிலையில், முன்தேதியிட்டு அதாவது ஜனவரி 25ம் தேதி இருந்து சஸ்பெண்டு செய்யப்படுவதாக உத்தரவிட்டுள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம்  கண்டனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி