நாகர்கோவில் மற்றும் ஓசூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்கின்றன! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 13, 2019

நாகர்கோவில் மற்றும் ஓசூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்கின்றன!நாகர்கோவில் மற்றும் ஓசூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்கின்றன. நாகர்கோவில், ஓசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் சட்ட முன்வடிவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, தஞ்சை, திண்டுக்கல் ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன.  இந்நிலையில் மேலும் 2 மாநகராட்சிகள் உதயமாகிறது. நாகர்கோவில், ஓசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் சட்ட முன்வடிவு இன்றே சட்டப்பேரவையில் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக ஓசூர் திகழ்கிறது. நாட்டில் மிகப்பெரிய சிப்காட் தொழிற்பேட்டை, டால் விமான நிலையம், ஐ.டி. பார்க் ஆகியவை ஓசூரில் உள்ளன. 1962 ஆம் ஆண்டு ஊராட்சியாக இருந்த ஓசூர், பின் தேர்வுநிலை பேரூராட்சியாக மாற்றப்பட்டது. 1992-ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1998-ல் சிறப்பு தேர்வுநிலை நகராட்சியாகவும் மாற்றப்பட்டது. கடந்தாண்டு நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஓசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் சட்ட முன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது.

கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவில், 1920-ல் உருவாக்கப்பட்டது. 1978-ல் தேர்வு நிலை,1988-ல் சிறப்பு நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது. தற்போது 52 வார்டுகள் உள்ளன. 2011-ல், ஆசாரிப்பள்ளம் பேரூராட்சி மற்றும் நான்கு ஊராட்சிகள், நாகர்கோவில் நகராட்சியுடன் இணைக்கப்பட்டன. மொத்த மக்கள் தொகை 2.60 லட்சம்; பரப்பளவு, 49.10 சதுர கி.மீ. கடந்தாண்டு நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது நாகர்கோவில் மாநகராட்சியாக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருந்தார். இந்நிலையில்  நாகர்கோவிலை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் சட்ட முன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி