மருத்துவ பட்ட மேற்படிப்பு 56 இடங்களுக்கு அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2019

மருத்துவ பட்ட மேற்படிப்பு 56 இடங்களுக்கு அனுமதி


அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 56 மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களுக்கு, எம்.சி.ஐ., அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., போன்ற, மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு, 1,250இடங்கள் உள்ளன. டிப்ளமா படிப்புகளுக்கு, 293 இடங்கள் உள்ளன.

இந்த டிப்ளமா படிப்புகளையும், பட்ட மேற்படிப்புகளாக மாற்ற, மருத்துவ கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், கூடுதலாக, 157 பட்ட மேற்படிப்பு இடங்களுக்கு அனுமதி வழங்கும்படி, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ.,யிடம், தமிழக அரசு கோரியிருந்தது. அதில், 56 இடங்களுக்கு, எம்.சி.ஐ., அனுமதி வழங்கியுள்ளது. இந்த இடங்களுக்கு, வரும் கல்வியாண்டு முதல், மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

இது குறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறுகையில், 'அனுமதி கோரப்பட்ட, 157 இடங்களில், 56 இடங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. அடுத்த கல்வியாண்டிற்குள், கூடுதலாக, 50 இடங்களுக்கு மேல் அனுமதி பெற முயற்சி எடுக்கப்படும்' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி