இந்திய ராணுவத்தில் 76,500 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் ( படை வாரியாக பணியிடங்களின் எண்ணிக்கை வெளியீடு) - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 7, 2019

இந்திய ராணுவத்தில் 76,500 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் ( படை வாரியாக பணியிடங்களின் எண்ணிக்கை வெளியீடு)


துணை ராணுவப் படைகளில் காலியாக உள்ள 76,578 பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (21,566 காலிப் பணியிடங்கள்), எல்லைப் பாதுகாப்புப் படை (16,984), சஷாஸ்த்ர சீமா பல் (8,546), இந்திய-திபெத் எல்லை காவல் படை (4,126), அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ( 3,076) மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, இதர மத்திய ஆயுதப் படைகளில் மொத்தமுள்ள 76,578 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு பெரிய அளவிலான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

இதில் 54,953 இடங்கள் காவலர் பணியிடங்களாகும். பிப்ரவரி-மார்ச் மாதங்களுக்கு இடையே எழுத்துத் தேர்வு நடத்தப்படும். மொத்த இடங்களில் 7,646 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டவை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி