சோலார் மின்சாரம் மூலம் செல்போனுக்கு சார்ஜ் - அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2019

சோலார் மின்சாரம் மூலம் செல்போனுக்கு சார்ஜ் - அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்!


அரசு பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் சோலார் மின்சாரம் மூலம் செல்போனுக்கு சார்ஜ் செய்து மாணவர்கள் அசத்தினர். பள்ளி பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 நாள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இறுதி நாளான நேற்று கலை நிகழ்ச்சிகளுடன் கண்காட்சி நிறைவுபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், உதவித் தலைமை ஆசிரியர் தேன்மொழி, பொறுப்பாசிரியர்கள் சுமதி, ரமணிபாய் முன்னிலை வகித்தனர்.

இதில் அம்மூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு ரசித்தனர். கண்காட்சியில் 8ம் வகுப்பு மாணவர்கள் ஜித்தேஷ், கபிலன், செந்தில்நாதன் ஆகியோர் சூரிய வெப்பம் மூலம் மின்சாரம் எடுத்து மின்விளக்குகளை எரிய வைத்தும், செல்போன்களுக்கு சார்ஜ் செய்து காட்டி அசத்தினர். முடிவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

1 comment:

  1. 8ம் வகுப்பு மாணவர்கள் இதைச் செய்தார்கள்.???

    நம்புவோமாக!!!!

    சொந்த முயற்சியில் செய்யப்படும் அறிவியல் படைப்புகளுக்கு மட்டுமே பாராட்டுக்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி