நாங்கள் சம்பள உயர்வுக்காகப் போராடவில்லை!’ - ஜாக்டோ-ஜியோ விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2019

நாங்கள் சம்பள உயர்வுக்காகப் போராடவில்லை!’ - ஜாக்டோ-ஜியோ விளக்கம்



மாணவர்கள் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறையில்லை என்பது போன்ற செய்திகளைப் பெரும்பாலானோர் பரப்பிவருகின்றனர்.

மாணவர்களுக்கும் சேர்த்துதான் எங்களுடைய போராட்டத்தை நடத்தினோம்' என்று வேதனையுடன் பேசுகின்றனர் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள்.புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழையை ஓய்வூதியத் திட்ட முறையையே கொண்டு வர வேண்டும்.ஊதிய முரண்பாடுகளைக்  களைய வேண்டும்.அரசுப் பள்ளிகளை மூடக் கூடாது. அரசுத் துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு வகைசெய்யும் அரசாணை 56-ஐ ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.இந்தப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தை நிறுத்த அரசுத் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில்முடிவடைந்தது. இதனால் போராட்டத்தின் வீரியம் அதிகரித்தது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராடத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, பல்வேறு அரசியல்கட்சித்தலைவர்கள் கோரிக்களை ஏற்றும், தேர்வு நெருங்குவதால் மாணவர்களின் நலன் கருதியும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பு அறிவித்தது.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட 1,111 ஆசிரியர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கையை ரத்து செய்வதாகப் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஜாக்டோ-ஜியோவைச் சேர்ந்த சாந்தகுமாரிடம் பேசினோம்.``மாணவர்களுக்குத் தேர்வு நெருங்கி விட்டது என்று அரசும் நீதிமன்றமும் கேட்டுக்கொண்டதால்தான் எங்களுடைய போராட்டத்தை நாங்கள் வாபஸ் பெற்றுக்கொண்டோம். இப்படியிருக்க அரசு அறிவித்துள்ள ஆசிரியர்கள் மீதான இடை நீக்கம் ரத்து என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் சம்பளத்தை உயர்த்தித் தர வேண்டும் என்று கேட்கவில்லை.எங்கள் அடிப்படை உரிமைகளுக்காகத்தான் போராடினோம்.

வேலைவாய்ப்பை பறிக்கக் கூடிய அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் நாங்கள் முன் வைத்தது. இது எங்களுக்கானது மட்டுமல்ல.எதிர்காலத் தலைமுறையினருக்கானதும்கூட. அரசு வேலைக்கு வரும் பெரும்பாலானோர், தங்களது இறுதிக் காலகட்டத்தில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில்தான் வருகிறார்கள். அந்த நம்பிக்கையே சுக்குநூறாக்கப்படுகிறது.எங்களை விடுங்கள், எங்களுக்கு அடுத்துவரும் தலைமுறையினர் வந்து கேட்டால் யார் பதில் சொல்வது. அவர்களுக்கான போராட்டம்தான் இது. மக்களுக்கு எங்கள் கோரிக்கை தவறாக சென்றடைந்துவிட்டது. எங்களுக்கு சுயலாபம் இதில் எதுவும் இல்லை.

மாணவர்கள் மீது அக்கறை உள்ளதால்தான் இந்தப் போராட்டமே. எங்களிடம் படிக்கும் மாணவர்களுக்குநாளை அரசு வேலையே கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.அரசுப் பணிகளில் காலியிடங்கள் ஏற்படும்போது, தற்காலிகமாக அவுட் சோர்ஸிங் முறையில் ஆட்களைப்பணிக்கு அமர்த்துவதாகத்தான் அரசாணை 56-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.அப்படிப் பார்த்தால் நாளை அரசு பணி என்பதே இல்லாமல் போகும். எங்கள் கோரிக்கை நியாயமான கோரிக்கைகள் என்பதை மாணவர்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.

 நாங்கள் அரசு வேலைக்கு வந்துவிட்டோம் எங்களுக்கு பிரச்னையில்லை.வரும் தலைமுறையினர் பாதிக்கபடக் கூடாது என்பதன் சாரம்சம்தான் இந்தப் போராட்டம். வேறு எந்த சுயலாபமும் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.

9 comments:

  1. Nalla therium..admk yathir bakathinka dmk varum appa vamkiralam..

    ReplyDelete
  2. எவ்வளவு விளக்கம் சொன்னாலும் படித்த அதிலும் பிஎட் படித்து விட்டு டெட் டும் பாஸ் பண்ணிவிட்டு 7 வருசமா நமக்கு பட்டை நாமம் போடுறாங்களே ஏன் என்று அரசு மீதோ விதி எண் 56 மீதோ கோபம் கொள்ளாமல் அந்த வேலையை அவுட் சோர்சிங் முறையில் பார்ப்பதற்கு தயாராகிவிட்ட இளைஞர்கள் இருக்கும்போது இப்படி தான் அவர்கள் பொய்யாய் பரப்புவார்கள். கேட்டால் கேஸ் உள்ளது என்று கடைசியில் கூறிக்கொண்டே எந்த போஸ்டிங் கும் போடாமல் போவார்கள். அவர்களைத்தான் இந்த தமிழ்நாடு நம்பும். அடுத்து இன்னொரு போட்டி தேர்வு. அதிலும் கேஸ்...... இப்படி வருடங்கள் ஓட வேண்டியதுதான். படித்து தேர்வுகள் எழுதி கொண்டு இருக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
  3. ஆக ஆசிரியர்களுக்காகதான் பள்ளி மாணவர்களுக்காக இல்லை

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு சொன்னாலும் நாங்க திருந்தமாட்டோம்.....

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  4. அரசு வேலை கிடைக்காமல் வெம்பும் படித்த நண்பர்களே.....உங்கள் ஆதங்கத்தை அரசின்மீது காட்டுங்கள்...உங்களின் இத நிலைக்கு அரசுதான் காரணம்.உங்கள் கோவத்தை அரசு ஆசிரியர்கள் மீது காட்டுவது, தவறாக பதிவிடுவது தவறு.....உலக அனுபவத்தை கற்றுக்கொள்ளுங்கள்.....உங்களுக்கும் சேர்த்து போராடும் அவர்களை தரை குறைவாக பேசவேண்டாம்.

    ReplyDelete
  5. ஐயா வணக்கம் உங்கள் கோரிக்கை என்னவோ சரியாகத்தான் உள்ளது அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கூற இயலாது.
    அதே சமயத்தில் உங்கள் சங்கம் எடுத்த போராட்ட முறை தவறானது என்பதில் ஐரமஐயமி உங்கள் கூற்று என்ன மாணவர்களின் கல்வி நலனுக்காகவும் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கும் நாங்கள் போராட்டம் செய்தோம் என்று கூறி வருகிறீர்கள் இந்த போராட்டம் அவர்களுக்கான போராட்டம் என்றாள் முதலில் அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் மாணவர்களின் பெற்றோர்களிடம் விவரத்தைக் கூறி அவர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் போராட்டத்திற்கு முன்பாகவே இதை செய்து மக்களுடைய ஒத்துழைப்போடு போராட்ட களத்தை நோக்கி இருந்தாள் தோல்வி என்பது நமக்கு கிடையாது என்பதை உணர வேண்டும் அப்படி செய்யாத காரணத்தினால் இது சுயநல போராட்டம் என்றே மக்களால் கருதப்படும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மை....மாணவர்கள்,பெற்றோர்கள்,மக்கள் அனைவரிடமும் படிப்படியாக போராட்ட காரணங்களை பதிய வைத்து போராட்டம் நடத்தி இருந்தால் வதந்திகளுக்கு,பொய்யும் தலை தூக்கி இருக்காது.....நடந்தவைகளை பாடமாக எண்ணி இனி எப்படி நடக்கவேண்டும் என ஆலோசனை செய்து இறங்குவது நலம்.....


      தேர்தலில் உங்கள் பலத்தை காட்டுங்கள்......

      உங்களை சுற்றி உள்ள ஒரு ஓட்டு கூட ஆளுங்கட்சிக்கு போக கூடாது......

      மாணவர்,பெற்றோர்களிடம் தவறான சம்பள பட்டியலை எடுத்து உரைக்க வேண்டும்,இனி இவர்கள் நம்மை ஆண்டால் என்ன நடக்கும் என்பதை அங்கங்கே பேசி பதிய வையுங்கள்....குறிப்பாக கிராமங்களில் பணம் கொடுத்து ஏமாற்றுவார்கள் என்பதை கவனமாக பதிவிடுங்கள்.......

      Delete
    2. ADMK ku mattum vote podathinga frds.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி