நடவடிக்கையை திரும்ப பெறுங்க! : 'ஜாக்டோ - ஜியோ' வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2019

நடவடிக்கையை திரும்ப பெறுங்க! : 'ஜாக்டோ - ஜியோ' வேண்டுகோள்


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெறும்படி முதல்வருக்கு 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு வேண்டு கோள் விடுத்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ - ஜியோ' நிர்வாகிகள் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் ஸ்வர்ணாவை நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தும் மனு கொடுத்துள்ளனர்.

மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:

முதல்வரின் வேண்டுகேளை ஏற்றும்எதிர் காலத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்என்ற நம்பிக்கையிலும் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றோம்.பின் பணிக்கு சென்ற போது அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் முதல்வரின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.பணிக்கு சென்ற ஆசிரியர்களை வேறு பள்ளியில் சேரும்படி உத்தரவிட்டுள்ளனர். வழக்கு நிலுவையில் இருப்பதால் பணியில் சேர மறுக்கும் நிலை உள்ளது.தற்காலிக பணி நீக்கம் ஒழுங்கு நடவடிக்கை எனக்கூறி பணி வழங்க மறுக்கும் நிலை உள்ளது. இதை உடனடியாக கைவிட வேண்டும். மாறுதல் பணியிட உத்தரவு வழங்கப்பட்டிருந்தால் அதை திரும்பப் பெற வேண்டும்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெறவேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் அரசுக்கு உள்ள உறவினை சுமூகமாக்கி பணித்திறன் மேம்பட உதவ வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

7 comments:

 1. இந்த அரசை dismiss செய்வோம் என்று சொல்லி இப்போ ஏன் வேண்டுகோள் வைக்கிறீர்கள்.

  ReplyDelete
 2. Ha Ha.... This the good lesson to all government staff. Thanks to ADMK government.

  ReplyDelete
  Replies
  1. ஓ....நீ பத்தாயிரம் கூலிக்கு வந்த பார்ட்டியா நீ......ஜென்மத்துக்கும் நீ எம்ப முடியாது......

   Delete
 3. 60,70ஆயிரம் வாங்கியும் பத்தலை என சொல்லும் பிச்ச பார்ட்டியா நீ இந்த நாடு முன்னேற்றத்துக்கு தடையே உன்ன மாறி selfish தான்.

  ReplyDelete
 4. அந்த fish எங்க அண்ணா கிடைக்கும்......வருக்கணுமா....குழம்பு வைக்கணுமா.....

  ReplyDelete
 5. எல்லா goverment school ல கிடைக்கும் தம்பி ஒரு வாரமா வறுத்த மாறி இனிமேல் வறுக்கும்.

  ReplyDelete
 6. 365 நாள் புழுக்கம்.......உங்களை வாட்டுது......இனி TRB பணியிடம் இருக்காது எது எடுத்தாலும் 7700 தான்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி