சுயநிதி பாடப்பிரிவு மாணவர்களுக்கு இலவச, 'லேப்டாப்' வழங்க முடிவு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2019

சுயநிதி பாடப்பிரிவு மாணவர்களுக்கு இலவச, 'லேப்டாப்' வழங்க முடிவு?அரசு உதவி பெறும் பள்ளிகளில், சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும், 'லேப்டாப் கம்ப்யூட்டர்' வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, அவர்கள் படிப்பை முடித்ததும், இலவச, லேப்டாப் வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும், ஐந்து லட்சம் மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும், மாணவ - மாணவியர் மற்றும், 2017 - 18ம் கல்வி ஆண்டில் படித்த மாணவ -மாணவியருக்கும் சேர்த்து, இந்த ஆண்டு, லேப்டாப் வழங்கப்பட உள்ளது.இந்த திட்டத்தில், வழக்கமாக, அரசு உதவி பெறும் பள்ளிகளில், சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கப்படுவதில்லை. இந்த பாகுபாடு காரணமாக, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மத்தியில் பிரிவினை ஏற்பட்டது.இதனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், அனைத்து மாணவர்களுக்கும், லேப்டாப் வழங்க வேண்டும் என, பெற்றோர் தரப்பில், நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம், அதிகாரிகள் தெரிவித்தனர்.அவரும், அரசுஉதவி பெறும் பள்ளிகளில், சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும், லேப்டாப் வழங்கலாமா என, ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார். எனவே, தமிழகம் முழுவதும், சுயநிதி பாடப்பிரிவு மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணி துவங்கிஉள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி