ஏப்ரல், 27ல் ஓட்டல் மேலாண்மை படிப்புக்கான நுழைவு தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2019

ஏப்ரல், 27ல் ஓட்டல் மேலாண்மை படிப்புக்கான நுழைவு தேர்வுஓட்டல் மேலாண்மை படிப்புக்கானநுழைவு தேர்வு, ஏப்ரல், 27ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள, அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், பி.எஸ்சி., கேட்டரிங் படிப்பில் சேர்வதற்கு, தேசிய அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு, ஓட்டல் மேலாண்மைக்கான தேசிய கவுன்சிலிங் சார்பில், ஏப்., 27ல் நடத்தப்பட உள்ளது.இந்த ஆண்டு, ஓட்டல் மேலாண்மை நுழைவுத் தேர்வை, கணினி முறையில், தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர், மார்ச், 15க்குள் விண்ணப்பிக்கலாம் என, ஓட்டல் மேலாண்மைகவுன்சில் அறிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை ,www.nta.ac.inமற்றும்,www.ntanchm.nic.inஎன்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி