வாக்குப்பதிவு பணியில் ஆசிரியர்களுக்கு பதில் இதர துறை அரசு ஊழியர்களையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று சில காட்சிகள் கோரிக்கை வைத்தது.ஆனால் அனைத்து ஊர்களிலும் போதுமான அரசு ஊழியர்கள் இருப்பதில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.அதன்படி தமிழகத்தில் தற்போது 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 பேர் இடம் பெற்றுள்ளனர்.இந்நிலையில் கடந்த 23ம் தேதி (சனி), 24ம் தேதி (ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்தவர்கள் தங்களின் பெயரை சேர்க்க ஆர்வமுடன் விண்ணப்பம் செய்தனர்.இந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மட்டும் சுமார் 6 லட்சம் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடத்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
எப்போது வேண்டுமானாலும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வரலாம்.அதற்கு தயாராக இருக்க சொல்லியுள்ளோம். மக்களவைதேர்தலை முன்னிட்டு, போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார்.இன்று அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெறும். இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்படும்கருத்துக்களை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கான தேர்தல் ஆணையம் விடுத்தகாலக்கெடு நேற்றுடன் முடிவடைந்து விட்டது.சில அதிகாரிகளை இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசனைகள் கேட்டுள்ளனர்.இதுபற்றி டெல்லிக்கு தகவல் அனுப்பியுள்ளோம்.தமிழகம் முழுவதும் உள்ள 39 மக்களவை தொகுதியிலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் வசதியுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் (விவிபேட்) பயன்படுத்தப்படும்.
அதேபோன்று, தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றாலும்,புதிய எந்திரத்தில்தான் வாக்குப்பதிவு நடைபெறும்.வாக்குப்பதிவு பணியில் ஆசிரியர்களுக்கு பதில்இதர துறை அரசு ஊழியர்களையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 67,664 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளது.அனைத்து ஊர்களிலும் போதுமான அரசு ஊழியர்கள் இருப்பதில்லை.
இது குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் கருத்து கேட்டுள்ளோம்.தமிழகம் முழுவதும் இரட்டை பதிவுகளை நீக்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அனைத்துமாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை நியமிக்க கூடாது என அதிமுக கோரியிருந்தது.அக் கோரிக்கையை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் தற்போது சூசகமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வச்சு செய்வோம்ல...
ReplyDeletesuper
ReplyDeleteதமிழகத்தில் அரசு நிர்வாகம் ரொம்ப நல்லா நடக்குதாம் சொன்ன ஆளும்கட்சி இப்படிப்பட்ட ஒரு அதிகாரி உண்மை நிலையை போட்டு உடைத்தார் .. அரசு வேலைக்கு யாரையும் பணி அமர்த்த கூடாது என்பது மட்டுமே தமிழக அரசின் உறுதியான குறிக்கோள் ஏனென்றல் சம்பளம் கொடுக்கவேண்டும் அதற்கு நிதி இல்லை என்பது தான் உண்மை நிலவரம் .
ReplyDeleteஆம் அரசு வேலைக்குப் பணியமர்த்தினால் சம்பளம் கொடுக்கவேண்டும்..
Deleteமக்கள் வரிப்பணத்தையெல்லாம் சம்பளமாக்க் கொடுத்துவிட்டால் நாம் எதைக் கொள்ளையடிக்க பணம் இல்லையே என்பது தான் அரசியல்வாதியின் கவலை..
Sir super vaipu eps vetrathinka..
ReplyDeleteஇது கூட தெரியாமல் தமிழக அரசு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர்.... இனி உங்களின் ஆட்டம் தொடராது.....
ReplyDeleteயார் ஆட்சிக்கு வந்தாலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்க முடியாது
ReplyDeleteவச்சு செய்வோம் என்றால். கடந்த சட்டசபை தேர்தலில் கருணாநிதியை வச்சு செய்ஞ்சிங்கில்ல. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களை பதிலுக்கு வச்சு செய்வார்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமாதுளம் பழத்தைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய பயனுள்ள ஒரு தொகுப்பு
ReplyDeleteவச்சு செய்வோம் என்றால் எங்களை முதுகில் குத்திய,சஸ்பெண்ட் செய்த,பொதுமக்களிடம் எங்களை கேவலமாக பேசிய,சித்தரித்த எடப்பாடி கூட்டணிகளைப் பழி தீர்ப்போம்...இது தான் வச்சு செய்வோம் என்பதற்கு பொருள்..
ReplyDeleteதிருச்சி மாவட்டத்தில் உள்ள திருத்தலையூர் அரசு ஆதி திராவிடர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1500 மாணவர்கள் படித்துவந்தனர். இப்பொழுது 75 மாணவர்கள்தான் படிக்கின்றனர். இது போல் எத்தனையோ பள்ளிகள். எங்கே செல்லும் இந்த பாதை
ReplyDeleteசரியான நேரத்தில் ஆசிரியர் பணி நியமனங்கள் செய்யாதது தாண் காரணம்
ReplyDeleteஅது மட்டும் தான் காரணமா?
ReplyDeleteமக்கள் பணி செய்ய அரசு ஊழியர்கள் இல்லை, ஆனால் நியமிக்க முடியாது...
ReplyDeleteAdmk engalaya election duty kidaithu nu solra....vappom paru oppu......
ReplyDelete