தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 7, 2019

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!


தமிழக அரசின் 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்கிறார்.மக்களவைத் தேர்தல் வருவதால், பட்ஜெட்டில் மக்களை கவரும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மார்ச் முதல் வாரத்தில் மக்க ளவைத் தேர்தல்தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து, மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை கடந்த1-ம் தேதி தாக்கல் செய்தது. இதில், குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை, வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சம் என்பன உள்ளிட்ட பல்வேறுஅறிவிப்புகள் வெளியாகின. தேர்தலை மனதில் வைத்து பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.இந்நிலையில், தமிழக அரசின் 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட், சட்டப்பேரவையில் நாளை(8-ம் தேதி) தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மக்களவைத் தேர்தல் வருவதால் மக்களைக் கவரும் வகையில் பட்ஜெட்டில் புதியதிட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விவசாயம், வேலைவாய்ப்பு, சிறுதொழில், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது.மேலும், எதிர்வரும் காலங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்க, நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், கூடுதல் ஆதாரங்களை ஏற்படுத்தவும் தேவையான நிதி ஒதுக்கவும் பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடும். அப்போது, பட்ஜெட் மீதானவிவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவெடுக்கப்படும். பிப்.11 முதல் 18-ம்தேதி வரை பேரவை நிகழ்ச்சிகள் இருக்கும் என்றும், இறுதி நாளில் விவாதத்துக்கு பதிலளித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவார் என்றும் பேரவைச்செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி