அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் - ஆளுநர் துவக்கி வைத்தார்! - kalviseithi

Feb 25, 2019

அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் - ஆளுநர் துவக்கி வைத்தார்!


சென்னை அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். திருவான்மியூர் அரசுப்பள்ளியில் இந்த திட்டத்தை ஆளுநர் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னையில் அக்‌ஷய பாத்ரா தொண்டு நிறுவனம், சென்னை மாநகராட்சி இணைந்து இந்த காலை உணவை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்ததது.

இதனையடுத்து சென்னையில் அக்‌ஷய பாத்ரா தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் சென்னை மாநகராட்சி இணைந்து காலை உணவை வழங்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நிகழச்சியின் போது பேசிய ஆளுநர் பன்வாரிலால், மதிய உணவு வழங்கும் திட்டத்தையும், அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனத்திடம் வழங்க அமைச்சரவை பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் மதிய உணவு திட்டம் தொடங்கி  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் இடைநிற்றல் குறைந்து கல்வி விகிதம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி