ஆசிரியர் பணிக்கான தேர்வு: குழப்பத்தில் தேர்வர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2019

ஆசிரியர் பணிக்கான தேர்வு: குழப்பத்தில் தேர்வர்கள்!


தேர்ச்சி பெற்ற இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.


நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 7 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளிக்கல்வித்துறையில் பழங்குடியினருக்கான நிரப்பப்படாத இடங்களில் 93 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், கள்ளர் சீரமைப்பு பள்ளியில் எஸ்.சி, அருந்ததியர் பிரிவில் 19 பணியிடங்களையும் நிரப்பவுள்ளதாக அறிவித்தது. அதேபோல் பழங்குடியினருக்கான நிரப்பப்படாத 12 இடங்களுக்கான இடைநிலை ஆசிரியர் தேர்வும் நடத்தப்படவுள்ளதாக கூறியது.

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் பாடவாரியான காலிப்பணியிடங்களின் விபரம், விண்ணப்பிக்கும் தேதி, தேர்வு நடைபெறும் தேதி ஆகியவை தனியாக அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் தேர்விற்கு விண்ணப்பம் செய்வது குறித்து தெரியாமல் தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இந்த பணியிடங்களுக்கான தேர்வுகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை 149-ன் படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி ஆசிரியர் தேர்வு வாரியமானது கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கும், பழங்குடியினர் வகுப்பிற்கான நிரப்பப்படாத காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2012, 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தகுதிப்பெற்ற தேர்வர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஆனால் அவர்களுக்கு நடத்தப்படும் போட்டி எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

22 comments:

  1. நான் எந்த குழப்பத்தில் இல்லை ஏனெனில் நீதி மன்றத்தில் கண்டிப்பாக அரசாணை 149க்கு தடை வரும். பிறகு எப்படி போட்டி தேர்வு நடக்கும். சும்மா ஏதாவது கதை சொல்லி கொண்டே இருக்க வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. you will get job please go to study next competitive.i request friends no case

      Delete
  2. நண்பர்களே இவர்களின் ஆட்சிகாலமே ஒவ்வொரு நாளும் குழப்பத்தில்தான் நகர்கின்றன,நாம் மட்டும் எம்மாத்திரம்?

    ReplyDelete
  3. O k next court and Case to stay order

    ReplyDelete
  4. இந்த தேர்வு 2012,2013க்கு மட்டுமே நடத்த வேண்டும். ஏனெனில் இப்பணியிடம் 2013 தேர்வர்களுக்கு வழக்கு காரணமாக நிலுவையில் இருந்த ஒன்று..

    ReplyDelete
  5. வழக்கு தாக்கல் செய்ய முடியும்

    ReplyDelete
  6. நண்பர்களுக்கு ஒரு மிகப்பெரிய வேண்டுகோள் இந்த ஆட்சியில் pgtrb உறுதி அதாவது யாரும் கோச்சிங் சென்டர் சேர்ந்து பணத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம் இது உண்மை உண்மை உண்மை

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. அமைச்சர் 2012,2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்டு இந்த நியமன தேர்வு.இதில் 2013 -இல் அதிகமான வெயிட்டேஜ் முறையில் பணி நியமனம் பெற்றுஉள்ளார் ,பாவம் 2017-இல் தேர்வு சான்றிதழ் சரிபார்க்கபட்டு தரவரிசை பட்டியல் வெளியிடுவார்கள் என்று ஏமாற்றம் அடைந்தது தான் மிச்சம். அமைச்சர் நியமன தேர்வு ரத்து செய்வது தான் நல்ல தீர்வு .....

    ReplyDelete
  9. 2013 க்கு உரிய பணியிடங்கள்... இவை அனைத்தும்.
    ஆகவே 105 மதிப்பெண் பெற்றும் 0.02ல் வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பு இழந்த எனக்கு வழக்கு தொடர எனக்கு தார்மீக உரிமை உண்டு...

    காரணம்.. நான் தேர்வு எழுதும் போது அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடம் இது...

    ReplyDelete

  10. நான் 2017 ல் 107 மதிப்பெண் பெற்றுள்ளேன். ஆனாலும் தடுமாற்றம் மிகுந்த அரசிடம் தனக்கு உரிய உரிமையை விட்டு கொடுக்க

    ReplyDelete
    Replies
    1. முடியாது...
      ஆகவே எனக்கு உறுதுணையாக இருந்து 2013 தேர்வர்கள் கைகொடுக்க வேண்டும்

      Delete
    2. நமக்கு உரிய பணியிடங்கள்....
      0.01....ல் பணி வாய்ப்பு தவற விட்டவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.நான் வழக்கு தொடர்வேன்.
      அப்போது அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடம் அன்றைய அரசாணை பொருத்து அமையும்.

      Delete
    3. அறிவியல், கணிதம், தொழிற்கல்வி....
      தன்னாட்சி,புதிய பாடத்திட்டம் என பாகுபாடின்றி வெயிட்டேஜ் முறை வகுத்த முட்டாள்கள் நிறைந்த அரசிடம் நாம் உள்ளம்.

      Delete
  11. வழக்கு தாக்கல் செய்ய முடியும்

    ReplyDelete
  12. நியமன தேர்வு வைத்தால் ! கண்டிப்பாக,வினாத்தாள்கள் விலைக்கு விற்கப்பட்டு பணம் சம்பாதிக்க ஒரு கூட்டம் காத்து இருக்கிறது .. அதை மனதில் அனைவரும் வைப்போம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி