துப்புரவு பணியில் சேர பட்டதாரிகள் ஆர்வம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2019

துப்புரவு பணியில் சேர பட்டதாரிகள் ஆர்வம்


சட்டசபை செயலகத்தில், துப்புரவு பணியாளர் பதவிக்கு, பி.டெக்., - எம்.டெக்., படித்தவர்கள் விண்ணப்பித்திருப்பது, அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மக்களிடம் இன்னமும், அரசு வேலை மீதான மோகம் குறையவில்லை. அதிகம் படித்தவர்களும், எடுபிடி வேலையாக இருந்தாலும், அரசு வேலையாக இருந்தால் நல்லது என, நினைக்கின்றனர்.

அதற்கேற்ப, வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்துள்ளது.பொறியியல் உட்பட, தொழிற் கல்வி பயின்றவர்கள் பலர், வேலையின்றி தவித்து வருகின்றனர். படிப்புக்கேற்ற வேலை கிடைப்பதில்லை என்பதால், எந்த வேலை கிடைத்தாலும் செய்வதற்கு, பட்டதாரி இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தயாராக உள்ளனர்.சமீபத்தில், சென்னை, சட்டசபை செயலகத்தில் காலியாக உள்ள, 14 துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு, விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இப்பணிக்கு, 3,900க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள். எம்.டெக்., - பி.டெக்., - எம்.பில்., - எம்.காம்., - பி.காம்., - பி.எஸ்சி., - பி.எட்., - பி.ஏ., டிப்ளமா - எம்.சி.ஏ., பட்டதாரிகள் விண்ணப்பித்துஉள்ளனர்.இது குறித்து, சட்டசபை செயலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:துப்புரவு பணியாளர் பணிக்கு வந்த விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பட்டியலை, சட்டசபை செயலக இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம்.

 சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த பின், ஆட்களை நியமிக்க முடிவு செய்திருந்தோம். தற்போது, தேர்தல் முடிந்த பின், நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பட்டதாரிகளுக்கு, வெளியில் எந்த வேலைக்கு சென்றாலும், 10 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் கிடைக்கும். துப்புரவு பணியாளர் என்றாலும், 17 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்பதால், பட்டதாரிகளும் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

6 comments:

 1. இப்ப தெரியுதா வேலையின்மைக்கு யார் காரணமென்று, அரசு வேலை பெறுவது எவ்வளவு கடினமென்பது GO 56 சொல்லுது, இப்ப கோர்ட், ஆசிரியருக்கு எதிராக கருத்து சொன்ன மாமனிதர்களும், உணவகங்களில், கடைகளில் , எத்தனையோ பட்டதாரிகளை நினைத்து பாருங்கள் என சொன்னவர்கள். ஏன் அரசிடம் ஒரு வெள்ளை அறிக்கை விட சொல்லுங்கள் எவ்வளவு காலி பணியிடம் கடந்த 10 ஆண்டுகளில் உள்ளது, 10 ஆண்டுகளில் அரசு பணியில் நிரப்பப்பட்ட இடங்களில் எண்ணிக்கை எவ்வளவு என கேளுங்கள் அல்லது நீதிமன்றம் செல்லுங்கள் ஒரு காலத்தில் அரசு வேலைக்காக ஏங்கியவர்கள் தான் இன்று போராடுகிறார்கள் அவர்களுக்கும் தெரியும் அரசு வேலை எளிதாக கிடைக்காதென்பது, சலுகையை கேட்க்கவில்லை, உரிமையை தான், ஏற்கனவே அனைத்து மத்திய அரசு பணியிடங்களிலும் தமிழகத்தில் அண்டை மாநிலத்தவர் பறித்து கொண்டார்கள், இனி தமிழக அரசு பணியிலும் OUT SOURCE முறையிலும் புகுந்து விடுவர்கள் அப்ப என்ன போறோம், எந்த அரசும், அரசியல் வாதிகளும் ஒன்று தான் அவரவர் வசதிகளை பெருக்கிக் கொள்வதில், வேலையற்றவர்களையும், அரசு வேலையில் உள்ளவர்களையும் மோதவிட்டு இரத்தம் குடிக்கும் ஓநாய்கள் புரிந்து கொள்ளுங்கள் என்றாவது ஒரு நாள் புரட்சி வெடிக்கும் நன்றி

  ReplyDelete
 2. தலைமுறையை அரசியல்வாதிகள் முன்னேற விடாமல் தடுக்கின்றனர்.வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்காமல் இளைஞர்களை தவறான பாதைக்கு செல்கிறார்கள்

  ReplyDelete
 3. V r sold by politician , no comments

  ReplyDelete
 4. V r sold by politician , no comments

  ReplyDelete
 5. V r sold by politician , no comments

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி