சென்னையில் ஏற்பட்ட நிலஅதிர்வு காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை: வானிலை மைய இயக்குனர் விளக்கம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 12, 2019

சென்னையில் ஏற்பட்ட நிலஅதிர்வு காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை: வானிலை மைய இயக்குனர் விளக்கம்


சென்னையில் ஏற்பட்ட நிலஅதிர்வு காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்திய நேரப்படி சுமார் 7 மணி 2 நிமிட அளவில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே 600 கி.மீ தொலைவில், கடல் மட்டத்திற்கு கீழே 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இது குறித்து வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடக்கு அந்தமான், சென்னை பகுதிகளில் உள்ள நிலநடுக்க கருவி பகுதிகளில் பதிவாகியுள்ளது. இந்த நிகழ்வால் எந்த சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என கூறினார்.

இந்த நிலநடுக்கம் கடல் பகுதிகளில் நிலவியதால் பெரிய பாதிப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். நில அதிர்வுகள் குறித்த முதற்கட்ட தகவல்கள் மட்டுமே தற்போது கிடைத்ததாகவும், விரிவான தகவல்கள் குறித்து அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதேபோன்று சென்னையை மையப்புள்ளியாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்படவில்லை என்றும், சென்னைக்கு வெகுதொலைவில் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், மக்கள் அச்சப்படவேண்டாம், வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம், அதனை நம்பவேண்டாம் எனவும் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி