புதிதாக தேர்வு செய்யப்பட்ட, 1,822 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, பணி நியமன ஆணைகளை, முதல்வர், இ.பி.எஸ்., வழங்கினார்.
தமிழகத்தில், 2015 - 16; 2016 - 17 மற்றும் 2017 - 18ல், 1,822 வி.ஏ.ஓ., பணியிடங்கள் காலியாகின. அவற்றை நிரப்புவதற்காக, 2018ல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வில், 1,822 கிராம நிர்வாக அலுவலர்கள், தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்குபணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இதன் துவக்கமாக, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று முன்தினம், தலைமை செயலகத்தில், 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.அத்துடன், காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில், 1.96 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, குறுவட்ட அலுவலர்களுக்கான, குடியிருப்புடன் கூடிய அலுவலக கட்டடங்களை, முதல்வர், இ.பி.எஸ்., 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் துறை அமைச்சர், உதயகுமார், தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.ஆணை வழங்கினார் முதல்வர்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி