பிளஸ் 1 பொது தேர்வில் தமிழ் வினாத்தாள் மிகவும், 'ஈசி' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2019

பிளஸ் 1 பொது தேர்வில் தமிழ் வினாத்தாள் மிகவும், 'ஈசி'


பிளஸ் 1 பொது தேர்வு நேற்று துவங்கிய நிலையில், புதிய பாட திட்டத்தில், தமிழ் வினாத்தாள் எளிதாகஇருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 1 பொதுதேர்வு, 2017 - 18ம் கல்வி ஆண்டில் அறிமுகமானது.

இதன்படி, இரண்டாம் முறையாக, இந்த ஆண்டு, பிளஸ் 1பொது தேர்வு, நேற்று துவங்கியது. இந்த தேர்வில், 8.16 லட்சம் மாணவ - மாணவியர்பங்கேற்றுள்ளனர்.இந்த ஆண்டு, புதிய பாடத்திட்டத்தில், பிளஸ் 1 தேர்வு நடக்கிறது. புதிய வினாத்தாள் முறை அறிமுகமாகியுள்ளது. அதேபோல, மொழிப் பாடங்களுக்கு, இரண்டு தாள்கள் ரத்து செய்யப்பட்டு, ஒரே தாள் தேர்வு அறிமுகமாகி உள்ளது.இப்படி பல்வேறு மாற்றங்களுடன் நடக்கும் பொதுத் தேர்வு என்பதால், மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், நேற்றைய பொதுத்தேர்வு, மாணவர்களுக்கு மிகவும் எளிதாகஇருந்தது. மொத்தம், 90 மதிப்பெண் களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், மாணவர்களின் தேர்ச்சிக்கு பாதிப்பில்லாத வகையில் கேள்விகள் இடம் பெற்றன.

வினாத் தாள் குறித்து, சென்னையை சேர்ந்த தமிழ் ஆசிரியை, ஜெயலட்சுமி கூறியதாவது:புதிய பாட திட்டம், புதிய தேர்வு முறையால், மாணவர்களுக்கு அதிக பயிற்சி அளித்தோம். வினாத் தாள் எளிமையாகவே இருந்தது. வினாத் தாளில், மாணவர்கள் யோசித்து பதில் அளிக்கும் வகையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் உள்ளது போல,தரமான கல்வியை, தமிழக மாணவர்கள் பெறும் வகையில், வினாத் தாளும் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவ - மாணவியர் தேர்ச்சி பெறுவதில் பிரச்னை இல்லை. அதிக மதிப்பெண் பெறுவதற்கு, அதிக பயிற்சி எடுக்க வேண்டியது முக்கியம். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி